Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » விண்வெளிக்கலம்

இந்தியா தயாரிக்கும் இறக்கை விண்வெளிக்கலம்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளிக்கலத்தை பயன்படுத்தி வருகிறது. அதில் கொலம்பியா விண்கலம் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அதுபோன்ற திரும்ப பயன்படுத்தக்கூடிய இறக்கைகளுடன் கூடிய விண்கலத்தை உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ முடிவு செய்து இருக்கிறது. இதற்கான ஒரு தொழில்நுட்பத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இது குறித்து இஸ்ரோவின் ஆண்டு அறிக்கையில்,
’’இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் ஏராளமான தொழில்நுட்ப செயல்விளக்க திட்டங்களை உள்வாங்கி இருக்கிறது. மறுபயன்பாட்டு விண்வெளிக்கலம் தயாரிப்பு மற்றும் சோதனை என்பது ஹைப்பர்சோனிக் விமானம், தானாகவே தரையிறங்கும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தொழில்நுட்பகளின் மதிப்பீட்டு தளமாக இருக்கும். இதில் முதல்கட்டமாக ஹைப்பர்சோனிக் விமான பரிசோதனை இருக்கும்.
2012-13-ம் ஆண்டு வாக்கில் சந்திரயான்-2 செயற்கைகோள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 36 வகையான தொழில்நுட்ப கருவிகளை கொண்டு செல்வதற்கான முன்வடிவுகளை இஸ்ரோ பெற்று உள்ளது. சந்திரயான்-2 திட்ட விஞ்ஞான ஆலோசனைக்குழு எந்தெந்தவகையான கருவிகளை கொண்டு செல்வது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
வெளிநாடுகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆய்வின்போது தங்களது ஆராய்ச்சி கருவிகளையும் கொண்டு செல்வதற்கு இஸ்ரோவை அணுகி வருகின்றன. இதில் ரஷ்யாவின் தரையிறங்கு கருவி மற்றும் ரோவர் கொண்டுசெல்லப்பட உள்ளது.
இந்தியா-பிரான்ஸ் கூட்டு முயற்சியில் இந்த ஆண்டின் இறுதிக்குள் வானிலை ஆராய்ச்சிக்காக செயற்கைகோளை அனுப்பும் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் புவியின் வெப்பமண்டலம், வானிலை மாற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சிப்பணிக்கு தேவையான தகவல்களை சேகரிக்கும். புவிவெப்பமயமாதல் தொடர்பான ஆராய்ச்சிக்கான தகவல்களுக்கு தற்போது மிகப்பெரிய தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்த செயற்கை கோள் செலுத்தப்பட்டால் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டு தற்போது வானிலை ஆராய்ச்சிக்கு தேவையான தகவல்களை கொடுத்துவரும் மிகப்பெரிய 8 செயற்கைகோள்களில் ஒன்றாக விளங்கும்.

சமீபத்தில் அனுப்பிய ஓசியன்சாட்-2 செயற்கைகோள் தகவல்களை நாசாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply