Home
»
»Unlabelled
» பார்த்திபன் கனவு-கல்கி
பார்த்திபன் கனவு-கல்கி
Posted by: MSB Posted date: 23:31 / comment : 0
பார்த்திபன் கனவு-கல்கி

புத்தகம் : பார்த்திபன் கனவு
ஆசிரியர் : கல்கி
கல்கியின் முதலாவது வரலாற்றுப் புதினம் 'பார்த்திபன் கனவு' (1941 ). தமிழ் வரலாற்று புதின ஆசிரியர்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் கல்கி. ஒப்பீட்டளவில் இவர் எழுதிய வரலாற்று புதினங்கள் எண்ணிக்கையில் சிறிது எனினும் தரத்தில் சிறந்தவை. பொன்னியின் செல்வனுக்கு நிகராக தமிழில் வேறு நாவல்கள் இல்லை எனலாம். கல்கியின் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக பார்த்திபன் கனவு தான் சிறந்தது என சொல்வேன். சிவகாமியின் சபதம் இதற்கு பிறகு தான்.
வாதாபிப்போரில் பல்லவர்களுடன் இணைந்து போரிட சம்மதித்தும் அதற்கு பதிலாக சோழர்களை கப்பம் செலுத்தாத சுதந்திர அரசாக்க வேண்டும் என கோரி நரசிம்ம பல்லவனுக்கு ஓலை அனுப்புகிறான். ஆனால் நரசிம்மபல்லவன் பதிலே அனுப்பவில்லை. இதனால் அவன் போரில் கலந்து கொள்ளாததுடன் கப்பம் செலுத்தவும் மறுக்கிறான். வாதாபியை வென்ற பல்லவப் பெரும் படையுடன் தோல்வி ஏற்படும் என தெரிந்தே சிறு படையுடன் சென்று மோதி வீர மரணம் அடைகிறான். (தென் நாட்டு சிற்றரசர்கள் சிலர் பல்லவர்களை வெறுத்ததால் அவர்கள் வாதாபிப்போரில் புலிகேசி சார்பாக போரிட்டார்கள் என்றும் பார்த்திபன் வட நாட்டவருடன் இணைய விருப்பமில்லாததால் போரில் கலந்துகொள்ளவில்லை எனவும் சிவகாமியின் சபதத்தில் வாதாபிப்போர் பற்றி குறிப்பிடும் போது பார்த்திப சோழன் பற்றிய குறிப்பு வருகிறது.)பல்லவர்கள் தமது எருது கொடியை வாதபி வெற்றியின் பின்னர் சிங்கமாக மாற்றி விட்டார்கள்.பல்லவர்களது கொடியின் சின்னம் எது என்பதில் எனக்கு குழப்பம் நாவல் வாசித்த போது தான் தீர்ந்தது.
இன் நாவலை வாசிப்பவர்களுக்கு பார்த்திபன் மீது பெரு மதிப்பு வரும் என்பது நிச்சயம். புலிக்கொடிக்கு அவமானம் நேரலாகாது என்பதற்காக தோல்வி நிச்சயம் என்று தெரிந்து போரிடுகிறான். சுதந்திர வேட்கை மிக்கவனாக அவனது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந் நாவலின் முக்கிய பாத்திரங்களாக படகோட்டி பொன்னன், அவனது மனைவி
வள்ளியை சொல்லலாம். இவர்கள் பொன்னியின் செல்வன் பூங்குழலி, மந்தாகினிக்கு ஒப்பானவர்கள். சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி, நாகநந்தி எனப்படும் நீலகேசி போன்றவர்களையும் காண்லாம்.
தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நரபலி கொடுக்கும் கொடிய சமயக்கொள்கைகளை இல்லாது ஒளித்தமை, நீதி தவறாது ஆட்சி செய்தமை, மாறு வேடம் பூணும் திறமை என பேரரசர் நரசிம்மரின் பெருமைகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. சிவனடியாராக மாறுவேடம் பூண்டு விக்கிரம சோழனுக்கும் உதவுகிறார். விக்ரமனும் தந்தை போலவே சுதந்திர வேட்கை உடையவனாக இருக்கிறான். நரசிம்மரின் மகள் குந்தவியை காதல் மணம் புரிகிறான். சுதந்திர சோழ அரசை சிறப்பாக ஆட்சி செய்கிறான். எனினும் பார்த்திபனின் ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சூரியனுக்கு முன் மற்றய கிரகங்கள் ஒளி மங்கி விடுவது போல இவனது புகழ் பரவ நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழ் தடையாக இருந்தது. வழி வழியாக சோழ அரசர்கள் தமது புதல்வர்களுக்கு பார்த்திப சோழனின் கனவையும் வீர மரணத்தையும் சொல்லியே வளர்க்கிறார்கள். 300 வருடங்களின் பின் வந்த ராஜராஜர், ராஜேந்திரர் காலத்திலேயே பார்த்திப சோழன் கனவு முழுமையாக நிறைவேறுகிறது.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
உடலமைப்பு, முக அழகி...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

























No comments: