Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » கெண்டைமீன்

 கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக்
காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள், 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும், 180-210 சிற்றினங்களும் உள்ளன. இதன் தாயகம் ஐரோப்பாவும், ஆசியாவும் ஆகும். எனினும், உலகின் பல நாடுகளில் பணத்திற்காகவும், நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தவும், அழகுணர்வுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய சூழ்நிலையில் இவை நிலைத்து வாழ்கின்றன. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். ஆற்றில் வாழும் சில கெண்டைமீன்களின் தேவைகளும் நடத்தையும் கட்டமைப்பும் வேறு வகையானவை. இது மற்ற மீன்களை வேட்டையாடுவதில்லை. பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிர்களையும் நீர்த் தாவரங்களையுமே இது உணவாகக் கொள்கிறது. மேலும்..

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply