Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்

 வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்

நமது நண்பர்களிடம் உள்ள கோப்புகளை சோத்தித்து பார்ப்பதற்காக வாங்கி வருவோம். அப்போது கூடவே வைரசும் வருகிறதா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும். அதனை நம்முடைய கணினியில் உள்ளிட்டு நம்முடைய கணிப்பொறியில் உள்ள ஆண்டிவைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பார்ப்போம் ஆனால் முடிவு வேறு விதமாக இருக்கும். வைரஸ் இருப்பதாக நம்முடைய ஆண்டிவைரஸ் கூறும். ஆனால் நம்முடைய நண்பருடைய கணினியில் ஸ்கேன் செய்த போது எந்த விதமான வைரசும் இல்லை என அந்த கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் கூறும். இதில் எது உண்மை என ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் கூறியதே உண்மையாக இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் தவிர்க்க ஒரு ஆண்டிவைரஸ் ஸ்கேனர் உள்ளது.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒப்பன் ஆகும் விண்டோவில் எந்த கோப்பினை சோதிக்க வேண்டுமோ ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பானது சோதிக்கப்பட்டு முடிவு கூறப்படும்.
உங்களுடைய விருப்பபடி இந்த மென்பொருளின் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும்.இந்த மென்பொருளில் 20எம்.பி அளவுடைய கோப்புகளை மட்டுமே சோதிக்க முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் ஏழு (32,64)பிட் களில் இந்த மென்பொருளானது இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் பல ஆண்டிவைரஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடியது ஆகும். இதன் மூலம் எந்த ஆண்டிவைரஸ் சிறப்பானதாய் உள்ளது எனவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply