Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » போட்டோக்களை அழகுபடுத்த


போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்:

இயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.



இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply