Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » சராசரி

கணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி என்பது சமபங்கீட்டு முறையைக் குறிக்கும். இது பொதுவாக நடுநிலை எண்ணை அளப்பதாகும்.

சராசரி வகைகள்

கூட்டுச்சராசரி

கணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி (mean) என்பது சமபங்கீட்டு முறையில் நடுநிலை இராசியைக் குறிப்பதாகும்.

பல இராசிகளின் சராசரி என்பது அந்த இராசிகளின் மதிப்புகளை அவற்றுக்கிடையே சமமாகப் பங்கீடு செய்வதாகும்.

கூட்டுச்சராசரி = இராசிகளின் கூட்டுத்தொகை / இராசிகளின் எண்ணிக்கை
இராசிகளின் கூட்டுத்தொகை = கூட்டுச்சராசரி X இராசிகளின் எண்ணிக்கை
சராசரி என்பது, மிக குறைந்த இராசியை விடப் பெரியதாகவும், மிக அதிகமான இராசியை விடப் சிறியதாகவும் இருக்கும்.

இடைநிலையளவு

கணிதம் மற்றும் புள்ளியியலில், இராசிகளின் இடைநிலையளவு (median) என்பது இராசிகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள இராசியைக் குறிக்கும்.
இராசிகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள இராசி இடைநிலையளவாக அமையும்.
இராசிகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு இராசிகளின் சராசரி இடைநிலையளவாக அமையும்.

முகடு

 கணிதம் மற்றும் புள்ளியியலில், இராசிகளின் முகடு (mode) என்பது இராசிகளில் அடிக்கடி காணப்படும் இராசியைக் குறிக்கும். இது சராசரியின் ஒரு வகையாகும்.

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply