Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்

வேளாண்மை

தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதின் மூலம், பின்வரும் விரும்பத்தகுந்த குணங்களைப் பெறலாம்.
  • அதிக நோய் எதிர்ப்பு (Added Immunity)
  • வறட்சி எதிர்ப்பு (Drought resistance)
  • பூச்சி எதிர்ப்பு (Insect resistance)
  • பூஞ்சை எதிர்ப்பு (Fungal resistance)
  • அதிக விளைச்சல் (Increased yield)
  • அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் (Added nutrients)
  • ஒட்டுத் தாவர இனங்கள் (Hybrid plant varieties)
  • அதிக உப்புத் தன்மை கொண்ட நிலங்களிலும் விளைச்சல்
  • தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள நிலங்களிலும் விளைச்சல்

மருத்துவம்

  • DNA தடுப்பு மருந்துகள்(DNA Vaccines) - ஒரு நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியைத் தரும் குறிப்பிட்ட Antigen-களை உருவாக்கும் மரபணுப்பகுதிகளை நேரடியாக ஒருவருக்கு செலுத்துவதன் மூலம், அந்த நோய்க்கு எதிரான அவருடைய தடுப்பு சக்தியைத அதிகரிக்க இயலும்.
  • மரபணு சிகிச்சை (Gene therapy) - பரம்பரை நோய்கள் மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் உள்ளவர்களின் கோளாறான மரபணுக்களை நல்ல மரபணுக்களைக் கொண்டு மாற்றி அந்நோயை குணப்படுத்துவதோ அடுத்த தலைமுறைக்கு பரவாமல் செய்வதோ கொள்கையளவில் சாத்தியமாகும்.எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழு வெற்றி அடையவில்லை.
  • சுரப்பிகள் (Hormones) - குறைந்த அளவில் சுரப்பதால் குறைப்பாடுகளை உருவாக்கும் இன்சுலின் போன்ற சுரப்பிகளை பாக்டீரியாக்களைக் கொண்டு தயாரித்து மனித உடலில் செலுத்துவதன் மூலம் அக்குறைப்பாடுகளை போக்க இயலும்.

சுற்றுச்சூழல்

உயிர் நுட்பவியல் சுற்றுப்புறச்சூழலில் முக்கியப்பங்கினை வகிக்கிறது.இதன் மூலம் இயற்கை சுற்றுப்புறச்சூழல் மற்றும் அதன் முக்கிய கூறுகள் ஆகியனவற்றை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துதல் உள்ளிற்றவற்றைஉள்ளடக்கியது.
சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தும் காரணிகளை உயிர்காரணிகள் கொண்டு ஒடுக்கவும், அதனை மறுசுழற்சி முறைகள் மூலம் பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.

சட்டம்

உயிர்காரணிகள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் தோற்றம், அதனை பயன்படுத்தும் தர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிர்சட்ட வகைமை.
இதன் மூலம் உயிர் கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள் முறைமை படுத்த படுகின்றன.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply