Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » பொது அறிவு

  • ...நேபாளத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை முன்னிட்டு 2008 மே 28ல் அதன் மன்னர் கயனேந்திரா பதவி விலகினார். இதன் மூலம் நேபாளத்தின் 240 ஆண்டு கால ஷா வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது ?
  • ... போரில் புறமுதுகிட்ட சங்கத் தமிழ் மன்னர்கள், தங்கள் பழியை துடைக்க பட்டினி கிடந்து உயிர் விட்டனர். புறநானூறு இதை வடக்கிருத்தல் எண்ற பெயரில் பதிவு செய்துள்ளது?
  • ... சுமார் 5000 என்ற எண்ணிக்கையில் இருந்த தாசுமேனிய பழங்குடிகளின் மக்கள் தொகை, கிபி 1800 வாக்கில் அங்கு குடியேரத் தொடங்கிய ஆங்கிலேயர்களின் இனவெறித் தாக்குதல்களால் முப்பதே ஆண்டுகளில் 75ஆக குறைந்தது. இவ்வினத்தின் கடைசிப் பெண்ணான துருகானினி (படம்) 1876ல் ஆங்கிலேயச் சிறையில் இறந்ததை தொடர்ந்து இவ்வினம் உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தது?
  • ... டிராசிக் அல்லது திராசிக் (Triassic) என்பது 251± 0.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 199.6± 0.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். இந்த காலத்தில்தான் பவளப் பாறைகள், பூக்கும் தாவரங்கள் மற்றும் பறக்கும் இயலுமையக் பெற்ற முதுகெலும்பிகளான டெரசோர் போன்றவை தோன்றின?
  • ... மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்தும், ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்டதாகவும் இருந்தது. மேலும் இதுவே உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்நிலப்பரப்பு பேரரசும், மொத்த பரப்பளவு அடிப்படையில் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தாக இரண்டாவது பெரிய பேரசும் ஆகும்?

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply