Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்வித் தகுதி:


ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்வித் தகுதி:
       பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர தகுதி மதிப்பெண்கள்:
        அரசு ஒதுக்கீட்டின் கீழ், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள். அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கும் இதே தகுதிகளை குறைந்தபட்சத் தகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

பொதுப்பிரிவினர்: கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 55 சதவீதம்


பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (கிறிஸ்தவர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்): கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீதம்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்: கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 45 சதவீதம்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

சட்டப்படிப்புகளுக்கு கல்வித் தகுதி:

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எல்., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர, தேவையான கல்வித் தகுதி விபரம்:

1. பி.ஏ., பி.எல்., (5 ஆண்டுகள்)
பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும். சேர்க்கைக்கான தேர்வின் போது மொழிப்பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 40 சதவீத மதிப் பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பணியில் உள்ளவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாது.


2. பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் (5 ஆண்டுகள்)

பிளஸ் 2வில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 60 சதவீத மதிப் பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
 
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி:
             தமிழக அரசு கல்லூரி கல்வித்துறையின் விதிமுறைகளின் படி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும். என்றாலும் கல்லூரி முதல்வர், கல்லூரியின் மூத்த தேர்வு நிலை விரிவுரையாளர்கள், இணைப்பேராசிரியர் கொண்ட கமிட்டி பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக தகுதி உடைய மாணவர்களை படிப்பில் சேர்க்கிறது.


வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் வரம்புகளின் கீழ், அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரி, சிறுபான்மை கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2வில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி 210 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு மாணவர்களின் தரவரிசை நிர்ணயிக்கப்படும். பட்டப்படிப்பில் மாணவர் சேர விரும்பும் அதே பாடத்தில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண்களே மாணவரின் தரவரிசை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


விண்ணப்பதாரர்கள் அவர்கள் பிளஸ்2வில் எடுத்த பாடங்கள் அடிப்படையில் 5 வகையினராக பிரிக்கப்படுகிறார்கள். கல்லூரியில் சிலப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு அதே பாடத்தை பிளஸ் 2வில் படித்திருந்தால் மட்டுமே சேர முடியும். உதாரணமாக கணிதம். பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு எடுத்திருந்தாலும் சில பட்டப்படிப்புகளை படிக்க முடியும் உதாரணமாக இதழியல், உளவியல். இவ்வாறு வித்தியாசப்படும் பாடப்பிரிவுகளில் விண்ணப்பம் செய்த மாணவர்களை தரவரிசை கீழ்க்கண்ட 5 வகையாக பிரிக்கப்படுகிறது.


1.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப் பாடங்களை பிளஸ் 2வில் படித்திருப்பவர்.(தேர்வு செய்யும் முக்கிய மெயின் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடங்கள் இரண்டுக்கும் தலா 50 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)


2.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)


3.துணைப்பாடங்கள் இரண்டையும் பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் துணைப்பாடங்கள் பிரிவுகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்)


4.முக்கிய பாடம் அல்லது ஏதாவது ஒரு துணைப்பாடத்தை படித்திருப்பவர். (முக்கிய பாடம் அல்லது துணைப்பாடத்தில் 100 மற்றும் மூன்றாம் பிரிவு பாடங்களில் செயல்முறை தேர்வு இல்லாமல் 100)
5.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களை பிளஸ் 2வில் படிக்காதவர். (மூன்றாம் பிரிவு பாடங்களில், செயல்முறைத் தேர்வு இல்லாமல் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.)
 
மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர கல்வித் தகுதி:
                    மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இயற்பியல், வதியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 60 சதவீதத்துக்கு குறையாத மதிப் பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கில மொழிப்பாடத்தில், பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஜாதி மாணவர்களுக்கும் இதுபொருந்தும் என்று டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங் தெரிவித்துள்ளார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply