Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » இனப்பெருக்கம்

இனப்பெருக்கம்


மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம்.
பாக்டீரியா திசுப்பிளவு
ஓர் இனத்திலுள்ள் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முறை இனப்பெருக்கம் எனப்படும். இனப்பெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்றாகும். தாவரங்கள், நுண்ணுயிர்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள் எனப் பல்வேறு வகையான உயிர்ரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடை வெவ்வேறாகத் தோன்றினாலும், அடிப்படையாக, அவை கலவிமுறை மற்றும் கலவியற்றமுறை என இருவகைப்படும்.

கலவியற்ற இனப்பெருக்கம்:

இருபாலரின் புணரி அணுக்களின் சேர்க்கையின்றி, தனிப்பட்ட முறையில் பெருகும் முறை கலவியற்ற இனப்பெருக்கம்மாகும். பெரும்பாலான ஓர்திசுள் உயிரினங்கள், மற்றும் சில செடிகள் மற்றும் காளான் வகைகள் இவ்வாறாக பெருகுகின்றன.
கலவியற்ற இனப்பெருக்கம் பொதுவாக நான்கு வகைப்படும்
  • மரபணுப் பிளவு
சில உயிரினங்களில், கலவியற்ற இனப்பெருக்கத்தில், ஓர் உயிரிலிருந்து பிறந்த அனத்து உயிர்களுமே, மூல உயிரின் மரபணுக்களைக் கொன்டே பிறக்கும். இவ்வகையில் புதிய மரபுப் பொருட்களின் சேர்க்கை இல்லாததால், இதனை ஒருவகை நகலாக்கம் எனவே கூறலாம். பல பாக்டீரியாக்கள், மரபணுப்பிளவு மூலம் நகல்கள் செய்கின்றன.
  • உயிரணுப் பரிமாற்றம்.
வேறு சில பாக்டீரியக்கள் கிடவை உயிரணு நகைவு மூலம் உயிரணுக்குழுமத்துள் உயிரணுப் பரிமாறம் செய்கின்றன. பல பாக்டீரியாக்களுக்கிடையே உயிரணுப் பரிமாற்றம் நடக்கும் போழ்தும், இவ்வகை பெருக்கம் இருபாலரின் புணரி அணுக்கள் இல்லததனால், கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. இங்கு புதியதாகத் தோன்றும் பாக்டீரியாக்கள், பல பாக்டீரியாக்களின் உயிரணுக்களால் ஆனவை, நகல்கள் அல்ல.[1]
  • அரும்புவிடுதல்
சில செடிகள் அரும்புவிட்டு பெருகுகின்றன.
  • கன்னிப்பிறப்பு
பலக்கிய உயிரினங்களில், சிலவகையான மீன்கள், ஊர்வன[2], அரிய சில பறவைகள்[3] போன்றவை Parthenogenesis எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை கன்னிப்பிறப்பு ஆகும். அண்மையில் கொமொடொ டிராகன்கள் கன்னிப்பிறப்பு மூலம் பெறுகக்கூடியவை என்க் கண்டுபிடித்துள்ளனர்[4].

செயற்கை விந்தூட்டல்


செயற்கை விந்தூட்டல் எனப்படுவது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள், ஆணுடன் ஏற்படும் பாலுறவு நிகழ்வினால் ஏற்படும் இயற்கையான விந்தூட்டல் (natural insemination - NI) முறையாலன்றி, செயற்கையான முறையில் விந்தை உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply