Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!


சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம். தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்கு சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், ஒருவிதமான காந்தமான கண்கள், கணிவான கண்கள். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பேச வைக்கக் கூடியவர்கள்.
ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
(புதன்கிழமை 17 மார்ச் 2010)     
ஜோதிடத்தைப் பொறுத்தவரை கேட்கக் கூடாத கேள்வி அல்லது சொல்லக் கூடாத விஷயம் என்று எதுவும் கிடையாது. ஜாதகத்தைக் கொண்டு வருபவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் கிரக நிலைகளை ஆராய்ந்து உண்மையான பதிலைக் கூறுவதே ஜோதிடரின் கடமை.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம்.
ஒருவரை குருவின் ஸ்தானத்திற்கு உயர்த்துவது குருபகவான். பிறருக்கு கற்பிப்பவரை (கலை/கல்வி/தொழில்) ‘குரு’ என்று அழைக்கிறோம். அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் குரு சிறப்பாக இருந்தால் அவர் ‘குரு’ (ஆசிரியர்) ஸ்தானத்திற்கு உயரலாம்.
 
ஒருவர் விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் சந்திரனும், புதனும் நன்றாக இருக்க வேண்டும். பல முன்னணி விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தைப் பார்த்ததில் இதில் உண்மை இருப்பதை கண்டறிந்தோம்.
குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர்; வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது. அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு “குரு மேடு” என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிட ரீதியாக பரிகாரமே இல்லாத பிரச்சனை என்று எதுவும் கிடையாது. பொதுவாக பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு/பரிகாரம் உண்டு.
பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.
ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே கற்பூரம் போன்ற புத்தியுடன் காணப்படும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் சிறுவயதில் நன்றாக படிக்காத போதும், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் புரிந்து கொண்டு பயிலும் ஆற்றலைப் பெற்று மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பில் முத்திரை பதிக்கின்றனர்.
ஒருவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால் ஏழ்மை நிலையிலும் அவருக்கு தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாக பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும்.
காரிய நிமித்தமாக ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குறிப்பிட்ட நபர் அவர் எதிரில் வந்தால், சென்ற காரியம் சித்தியடையாது என சம்பந்தப்பட்டவர் மனதில் கருதுவார். ஆனால் அவருக்கு காரியத்தடை ஏற்படுத்தும் சக மனிதரால் மற்றவர்களுக்கு காரியத்தடை ஏற்படாது.
மதநல்லிணக்கம் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கிரகங்களின் தசை/புக்தி ஒருவருக்கு நடக்கும் போது அவர் வேற்று மதத்தினரால் ஆதாயம் பெறுவார் அல்லது பலன் அடைவார் எனக் கூறப்பட்டுள்ளது. 
ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.
மது, மாது ஆகிய இரண்டில் மட்டுமே இன்பம் என உலகில் உள்ள 100% மனிதர்களும் கருதுவதில்லை. ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது, 4ஆம் இடமான சுகஸ்தானமே ஒருவரின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 12ஆம் இடம் ஒருவரின் மறைமுக இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்வில் சிலர் பாரபட்சம் பார்க்காமல் விரும்பியதை சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதுபற்றிக் கேட்டல், சர்க்கரை நோய் இருக்கிறது, ரத்த அழுத்தம் இருக்கிறது என்று பதிலளிக்கின்றனர்.
நாகரீகமான, படித்த மனிதர்கள் மத்தியிலும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான விடயத்தில் தயக்கம் இருக்கிறது. எவ்வளவு சாப்பிடுவது என்பது முதல் எதைச் சாப்பிடுவது என்பது வரை இளைஞர்கள் மத்தியில் கூட குழப்பம் காணப்படுகிறது.
 
 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply