Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

இந்திய அரசியலமைப்பு மன்றத்தின் முதல் நாள் (திசம்பர் 11, 1946). வலதிலிருந்து : பி. ஜி. கெர் மற்றும் சர்தார் வல்லபாய் படேல்; படேலின் பின்பாக கே. எம். முன்ஷி
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (Constituent Assembly of India) இந்தியாவின் அரசியலமைப்பினை தொகுக்கவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாக பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேர்தல்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பிரித்தானிய ஆய குழுவினருக்கும் இந்தியத் தலைவர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வின் விளைவாக உருவாக்கப்பட்டது.இம்மன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்திய தேசிய காங்கிரசு பொதுத் தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெற்றிருந்தது.அகில இந்திய முஸ்லிம் லீக் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றது. சிறுபான்மைக் கட்சிகளான பட்டியல் சாதி கூட்டமைப்பு,யூனியனிஸ்ட் கட்சி,இந்திய பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

தில்லியில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய பாக்கித்தான், பங்களாதேசத்தின் மாநிலங்கள் மற்றும் இந்திய மன்னராட்சி மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் சிந்து, கிழக்கு வங்காளம்,பலுசிஸ்தானம்,மேற்கு பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லை மாகாண பிரதிநிதிகள் கராச்சியில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.
அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய மன்றத்தில் இறுதியாக 28 உறுப்பினர்களே இருந்தனர்.பின்னர் 93 பிரதிநிதிகள் மன்னராட்சி மாகாணங்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது. 2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.
ஆகத்து 15, 1947 அன்று இந்தியா விடுதலை பெற்றபின்னர் அரசியல் நிர்ணய மன்றம் இந்திய நாடாளுமன்றமானது.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply