மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்
Posted by: MSB Posted date: 08:03 / comment : 0
மொகெஞ்சதாரோ
மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்* | |
---|---|
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
நாடு | பாக்கிஸ்தான் |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii |
மேற்கோள் | 138 |
பகுதி† | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4வது அமர்வு) |
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
வரலாறு
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.லோத்தல்
லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடங்கி 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.மெஹெர்கர்
மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.
அரப்பா
அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
இனப்பெருக்கம் மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம். பாக்டீரியா திசுப்பிளவு ஓர் இனத்திலுள்ள்...
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள் , 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும் ...
-
மொகெஞ்சதாரோ மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள் * யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் க...
-
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: