Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

  


புதிய பாடப்பிரிவுகள்:
  • ஆடியோ இன்ஜினியரிங்
  •  சிற்பக்கலை படிப்புகள்
  •  ஆய்வக வேதியியல்
  •  பர்னிச்சர் டிசைனர
  • பிஷரி சயின்ஸ
  • சுற்றுச்சூழல் இன்ஜினியர
  • இக்னோவின் நகர்ப்புற நிர்வாகப் படிப்பு 
  •  கெமிக்கல் இன்ஜினியரிங் 
  • பைனான்சியல் இன்ஜினியரிங் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட் 
  • கிளினிக்கல் இன்ஜினியரிங் எம்.டெக்.,
          கடந்த ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறை தொழில்நுட்ப முன்னேற்றங்களால் முழுவதுமாக மாறியிருக்கிறது. நோய் அறியும் முறைகள், மருத்துவ கருவிகள், மருந்துகள், தடுப்பூசிகள் மாறியிருக்கின்றன. தற்போது மருத்துவமனைகளில் நவீன கருவிகளை திறமையாக உபயோகிக்கவும், நிர்வகிக்கவும் கிளினிக்கல் இன்ஜினியர்களின் உதவியை நாடுகின்றன. புதிய கருவிகள் வாங்குவது குறித்தும் மருத்துவமனைக்கு கிளினிக்கல் இன்ஜினியர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். அவற்றை பொருத்துவது சோதிப்பது தொடர்பான பணிகளையும் மேற்கொள்கின்றனர். மருத்துவ சூழலில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்தும் கிளினிக்கல் இன்ஜினியர்கள் அறிந்து கொள்வது அவசியம். எம்.டெக்., கிளினிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இன்ஜினியரிங் பயிற்சிகளுடன் மருத்துவம் தொடர்பான நுட்பங்களும் கற்றுத் தரப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ், திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி ஆகியவை இணைந்து இந்த எம்.டெக்., படிப்பை வழங்குகின்றன. அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த இரண்டரை ஆண்டுகால படிப்பில் மாணவர்களுக்கு மூன்று நிறுவனங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான திறன்வாய்ந்த முறையில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதை கிளினிக்கல் இன்ஜினியர்கள் உறுதி செய்கின்றனர். மருத்துவ சூழலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மருத்துவமனை போன்ற சூழலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மருத்துவரும் அவ்வப்போது மாணவர்களை சந்தித்து பயிற்சி வழங்கி, தேர்வுகள் மூலம் சோதிக்கிறார். இந்த படிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த படிப்பை நிறைவு செய்ததும், மருத்துவமனை, மருத்துவகருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். சிறப்பான மருத்துவசேவையை வழங்க மருத்துவமனைகள் போட்டி போடுகின்றன. இந்நிலையில் தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரை கொடுக்க தயங்குவதில்லை. மேலாண்மை நிர்வாகியாக நுழைந்து ஆராய்ச்சியாளராக கூட உயர முடியும்.
  • நகை விற்பனை 
  • பேஷன் மார்கெட்டிங் 
  • ஏவியேஷன் மேனேஜ்மென்ட்
  • டிரான்ஸ்போர்டேஷன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன் 
  • எம்.பி.ஏ., - எம்.எஸ்.எப்.,  
  • மாற்று மருத்துவத்தில் புதிய படிப்புகள் 
  • சுற்றுச்சூழலியல் 
  • - ரியல் எஸ்டேட் 
  • - நெட்வொர்க் இன்ஜினியரிங் 
  • - ஆடியோகிராபி