ஓவியத்தின் வரலாறு
Posted by: MSB Posted date: 21:43 / comment : 0
ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது.
கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.
பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 - 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 - 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.
மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 - 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.
மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.
கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.
கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.
- வரலாற்றுக்கு முந்திய கலை
பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 - 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 - 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.
மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 - 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.
கிழக்கத்திய ஓவியங்கள்
தென்னாசிய ஓவியங்கள்
- மான்கோட் மகாராஜா சீதல் தேவ் வழிபாட்டில் இருப்பதைக் காட்டும் பாசோலி ஓவியம், c. 1690.
- பீஜப்பூரின் இப்ராஹிம் ஆதில் ஷாவின் உருவப்படம் (1580-1626); 1615.
- கோவர்தன் சாந்த்தின் உருவப்படம், பஞ்சாப் பாணி, c. 1750.
- அக்பரும் தான்சனும் பிருந்தாவனில் ஹரிதாசைக் காணுதல், இராஜஸ்தான் பாணி, c. 1750.
- பிள்ளைகளுடன் ஒரு மனிதன், பஞ்சாப் பாணி, 1760.
- ராதை கண்ணனைப் பிடித்தல், பஞ்சாப் பாணி, 1770.
- காட்டில் இராமனும் சீதையும், பஞ்சாப் பாணி, 1780.
இந்திய ஓவியங்கள்
இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. இந்திய ஓவியம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.
- மதுபானி ஓவியப் பாணி
- ராஜபுதன ஓவியப் பாணி
- முகலாய ஓவியப் பாணி
- தஞ்சாவூர் ஓவியப் பாணி
- சென்னை ஓவியப் பாணி
- வங்காள ஓவியப் பாணி
கிழக்காசிய ஓவியங்கள்
- லுவோஷென்பூ, கு கைஸி வரைந்தது. (344-406 AD), சீனம்.
- Eighty-Seven Celestials, by Wu Daozi (685-758), Chinese
- Portrait of Night-Shining White, by Han Gan, 8th century, Chinese
- Spring Outing of the Tang Court, by Zhang Xuan, 8th century, Chinese
- Paradise of the Buddha Amitabha, 8th century, Chinese
- Ladies making silk, a remake of an 8th century original by Zhang Xuan by Emperor Huizong of Song, early 12th century, Chinese
- An illustrated sutra from the Nara period, 8th century, Japanese
- Ladies Playing Double Sixes, by Zhou Fang (730-800 AD), Chinese
- The Xiao and Xiang Rivers, by Dong Yuan (c. 934-962 AD), Chinese
- Golden Pheasant and Cotton Rose, by Emperor Huizong of Song (r.1100-1126 AD), Chinese
- Listening to the Guqin, by Emperor Huizong of Song (1100-1126 AD), Chinese
- Chinese, anonymous artist of the 12th century Song Dynasty
-
- Ma Lin, 1246 AD, Chinese
- A Man and His Horse in the Wind, by Zhao Mengfu (1254-1322 AD), Chinese
- Shukei-sansui (Autumn Landscape), Sesshu Toyo, (1420-1506), Japanese
-
-
- Pine Trees, six sided screen, by Hasegawa Tohaku (1539-1610), Japanese
-
- Scroll calligraphy of Bodhidharma, “Zen points directly to the human heart, see into your nature and become Buddha”, Hakuin Ekaku (1686 to 1769), Japanese
- Hanging scroll 1672, Kanō Tanyū, (1602-1674), Japanese
- Peonies, by Yun Shouping (1633-1690), Chinese
- Genji Monogatari, by Tosa Mitsuoki (1617–1691), Japanese
- View of Geumgang, Jeong Seon (1676–1759), 1734, Korean
- Ike no Taiga, (1723-1776), Fish in Spring, Japanese
-
- A Cat and a Butterly, Kim Hong-do (1745-?), 18th century, Korean
- A Boat Ride, Shin Yun-bok (1758-?), 1805, Korean
-
- A tanuki (raccoon dog) as a tea kettle, by Katsushika Hokusai (1760—1849), Japanese
- Katsushika Hokusai, The Dragon of Smoke Escaping from Mt Fuji, Japanese
-
-
கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
இனப்பெருக்கம் மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம். பாக்டீரியா திசுப்பிளவு ஓர் இனத்திலுள்ள்...
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள் , 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும் ...
-
மொகெஞ்சதாரோ மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள் * யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் க...
-
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: