Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

சிங்கப்பூர்: இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நாயாங் தொழில்நுட்ப பல்கலையை சேர்ந்த குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

please comment!!!
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
please comment!!!
 சென்னை: சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்., 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவ., 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை - 115, வேலூர்-112, விழுப்புரம் - 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
please comment!!!