Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» »Unlabelled » மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்

தமிழில் படித்து அறிந்து கொள்ளுங்கள்!
மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்மைக்ரோசாப்ட் வேர்டு 2007 பயன்பாட்டில் ஒரு சில அத்தியாவசியமான கட்டளைகளை, ரிப்பன் மெனுவில் எந்த டேபில் உள்ளது என்று தேடி எடுத்து பயன்படுத்துவது நமது அவசரத்திற்கு  ஆகாத விஷயம். இதனை எளிதாக்க, மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில் தரப்பட்டுள்ள Quick access toolbar எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.


வேர்டில் ஆஃபீஸ் பட்டனுக்கு அடுத்துள்ள மெனுவையே Quick Access Toolbar என்றழைக்கிறோம். இந்த டூல்பாரில் உள்ள சிறிய கீழ்நோக்கிய அம்பு குறியை (Customize Quick Access Toolbar) க்ளிக் செய்து,

திறக்கும் லிஸ்ட் பாக்ஸில், New, Open, Print Preview போன்ற வசதிகளை இந்த Quick Access Toolbar -இல் இணைத்துக் கொள்ளலாம்.


மேலும் இந்த லிஸ்டில் தரப்படாத கட்டளைகளை இந்த டூல்பாரில் இணைக்க, இந்த லிஸ்ட் பாக்ஸில் கீழே உள்ள, More Commands வசதியை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் Word Options திரையில், Choose Commands From க்கு கீழே உள்ள லிஸ்ட் பாக்ஸில், எந்த ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகளை இணைக்க வேண்டுமோ, அந்த ரிப்பன் டேபின் பெயரில் க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து அந்த குறிப்பிட்ட ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றில் உங்களுக்கு தேவையான, அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து, Add பொத்தானை அழுத்துங்கள்.
இப்படி தேவையான அனைத்து கட்டளைகளையும் இணைத்த பிறகு, கீழே உள்ள OK பொத்தானை அழுத்துங்கள்.




இந்த வழிமுறையை பின்பற்றி தேவையான கட்டளைகள் அனைத்தையும் இந்த Quick Access Toolbar இல் இணைத்து பயன்பெறலாம்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply