Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » பற்களை பாதுகாக்க…

பற்களை பாதுகாக்க…


* இரவில் படுப்பதற்கு முன் பல் துலக்க வேண்டும்.
*ஆறு மாத குழந்தையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பல் இடுக்குகளில் சிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட அரைமணி நேரத் திற்குள் வாய் கொப்பளித்தல், பிரஷ் செய்தல், பல் குத்தி மூலம் அகற்றி விட வேண்டும்.
* சொத்தைப் பற்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அடைக்க வேண்டும்.
* ஈறு நோயினால் பற்களை இழக்காமல் இருக்க ஈறுகளில் ரத்தம் கசிதல், வீக்கம், வாய் துர்நாற்றம், பல்காரை படிதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பற்களை இழக்க நேரிட்டால் நான்கு மாதத்திற்குள் செயற்கை பல் பொருத்த வேண்டும்.
* சுழற்றக்கூடிய செயற்கைப் பல் மற்றும் கிளிப் அணிந்திருந்தால் ஒவ்வொரு முறையும் உணவுக்கு பின் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
* முன்பு சிகிச்சைப் பெற்ற, அடைத்த பற்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.
 தண்ணீரே மருந்து..!

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோர், தனியாரிடம் வாங்கி சாப்பிடும் `கேன் வாட்டர்’தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மெட்ரோ தண்ணீரை குடித்தாலே போதும், முக்கியமாக காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.
நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.
உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்விவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply