இணையத்தை உருவாக்கியவர்கள் யார்?
Posted by: MSB Posted date: 15:29 / comment : 0
இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது?
இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1957 களில் சோவியத் அரசு தனது ச்புட்னிக் என்னும் செயற்கைகோளை
விண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான
செயற்கைக்கோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது.
இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது
Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி,
அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தித்
தருமாறு கேட்டுக்கொண்டது.
கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில்
அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய
ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை
ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதூரக்
கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும்
ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது
ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின்
பார்வைக்குக் கொண்டுவந்தது.
இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில்
உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு
பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில்
ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி
தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதேனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது
இல்லை.
(நம்முடைய இணையமும் அவ்வாறே! உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும்
மற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்-
கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற
கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை
அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே
அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று
காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)
அடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில்
உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள்
APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள்
(SUPER COMPUTER) மற்றும் MINIக் கணினிகள் போன்ற கணினிகளையும்
ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச்
செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine
Independant என்று கூறுவது உண்டு.
அதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள் (Operating System) பயன்படுத்தப்படும்
கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உறுவாக்கப்பட்டது. இதனை
ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.
இத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு
ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்-
கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக
இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவனங்களை
தம்மோடு இணைத்துப் பின்.......உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில்
வழங்கப்படலாயிற்று.
இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம்?
குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தந்த நாடுகளின் இணையத் தொடர்பை
அந்தந்த நாடுகளே கவணித்துக்கொள்கின்றன, மற்ற நாடுகளுடனான அந்நாட்டின்
தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்-
தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை
தனிச்சீர்மை (unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன
அதற்காக The Internet Corporation for Assigned Names and Numbers மற்றும்
Internet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும்

அமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
இனப்பெருக்கம் மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம். பாக்டீரியா திசுப்பிளவு ஓர் இனத்திலுள்ள்...
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள் , 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும் ...
-
மொகெஞ்சதாரோ மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள் * யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் க...
-
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: