2011
Labels
- அரசியல்
- அறிவியல்
- ஆராய்ச்சி
- ஆரோக்கியம்
- இயற்கை
- இலவச மடிக்கணினி
- இலவச மென்பொருட்கள்
- உடல் நலம்
- உயிரித் தொழில்நுட்பம்
- உயிரியல்
- உளவியல்
- கணிதம்
- கணினி தகவல்கள்
- கதைகள்
- கல்வி
- கல்வி தகவல்கள்
- காலநிலை
- குரூப்-2 தேர்வு
- சட்டம்
- சமுதாயம்
- சூரியக் குடும்பம்
- செய்திகள்
- டி.என்.பி.எஸ்.சி
- தகவல்கள்
- திருமணம்
- தேர்தல் முடிவுகள்
- தொழில்நுட்பம்
- புகையிலை
- புவியியல்
- புள்ளியியல்
- பொது அறிவு
- பொதுத் தேர்வு
- மக்கள் தொகை
- மருத்துவம்
- மின்னூல்
- மொபைல்
- வரலாறு
- விண்வெளி ஆராய்ச்சி
- விருது
- வேலைவாய்ப்பு
- ஜோதிடம்
இந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிமிடெட் நிறுவனம், ஏரோனாடிக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், ஏர்கிராப்ட் மனுபாக்சரிங் டிப்போ ஆகியவற்றை இணைத்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் 1964ல் நிறுவப்பட்டது. விமானம் மற்றும் இதர பாகங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் சர்வ தேசப் புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் 48 பிட்டர் பணி இடங்களும், 31 மெக்கானிகல் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: எச்.ஏ.எல்., நிறுவனத்தின் பிட்டர் மற்றும் மெக்கானிகல் பிரிவு டிப்ளமோ டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.ஏ.சி., அல்லது என்.சி.டி.வி.டி., சான்றிதழை இத்துறையில் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்வி அமைப்பின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்: எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து Hindustan Aeronautics Limited என்ற பெயரில் கான்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது.
இதன் பின்னர் ஆன்-லைனில் இந்தப் பதவிகளுக்கு 18.12.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து உரிய இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 28.12.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி :
Deputy General Manager (HR),
Hindustan Aeronautics Limited,
Transport Aircraft Division,
PB No225,
Chakeri, Kanpur - 208008 (UP).
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.12.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 28.12.2011
இணையதள முகவரி : www.hal&india.com/careers/knp/DT&TT&Knp_09&12&11.pdf
please comment!!!தேவைகள்: எச்.ஏ.எல்., நிறுவனத்தின் பிட்டர் மற்றும் மெக்கானிகல் பிரிவு டிப்ளமோ டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.ஏ.சி., அல்லது என்.சி.டி.வி.டி., சான்றிதழை இத்துறையில் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்வி அமைப்பின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்: எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து Hindustan Aeronautics Limited என்ற பெயரில் கான்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது.
இதன் பின்னர் ஆன்-லைனில் இந்தப் பதவிகளுக்கு 18.12.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து உரிய இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 28.12.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி :
Deputy General Manager (HR),
Hindustan Aeronautics Limited,
Transport Aircraft Division,
PB No225,
Chakeri, Kanpur - 208008 (UP).
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.12.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 28.12.2011
இணையதள முகவரி : www.hal&india.com/careers/knp/DT&TT&Knp_09&12&11.pdf
பத்து ஆண்டுகளுக்குப்பின் பஸ் கட்டண உயர்வு :54 சதவீதம் வரை உயர்கிறது
தமிழக அரசு, பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணம், சராசரியாக 54 சதவீதம் வரை உயர்கிறது. கடந்த 2001ம் ஆண்டின் இறுதியில்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப்பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகரம் கி.மீ., டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
திருச்சி 322 180 (105) 200 (130) 245 (180)
மதுரை 450 255 (145) 275 (180) 320 (240)
தஞ்சை 365 210 (118) 225 (140) 270 (190)
நெல்லை 613 350 (200) 375 (240) 435 (320)
கோவை 510 290 (165) 310 (200) 360 (270)
சேலம் 341 195 (115) 210 (135) 245 (180)
புதுச்சேரி 136 195 (115) 210 (135) 240 (180)

எப்போது அமலுக்கு வரும்?
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆணை இன்னும் வரவில்லை என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி பட்டியல் தயாரித்து வருகிறோம். அரசு உத்தரவு கிடைத்ததும், கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம்' என்றார்.
மற்ற தென் மாநிலங்களுக்கு இணையாக, தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு தொடர்பான விவாதங்கள் அரசியல் ரீதியாக ஏற்படும் போதெல்லாம், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்து, ஆளுங்கட்சி பதிலடி தருவது வழக்கம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு, தென் மாநிலங்களுக்கு இணையாக உள்ளது.
எவ்வளவு?
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை, 28 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது; இது, 42 பைசாவாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு (டீலக்ஸ்), அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்), அதிநவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களுக்கான கட்டண உயர்வும், பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் குளிர்சாதன பஸ்களுக்கு தற்போது, கி.மீட்டருக்கு, 85 பைசா வசூலிக்கப்படுகிறது. "ஏசி' பஸ்களுக்கு கேரளாவில், கி.மீட்டருக்கு, 90 பைசாவும், கர்நாடகாவில், 1.34 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த நேற்றைய அறிவிப்பில், "ஏசி' பஸ்களின் கட்டண உயர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தென் மாநிலங்களில் வசூலிக்கப்படும் பஸ் கட்டண விவரம் (கி.மீ.,):
*தமிழகத்தில் பழைய கட்டணம், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் புறநகர் (சாதாரண பஸ்கள்) டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)
* தமிழகத்தில், கடந்த 2001, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (17ம் தேதி) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ஷெட்யூல்டு வங்கிகளில் கேரளாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி தமிழ்நாட்டிலும் மிகவும் அறியப்பட்டுள்ள முன்னணி தனியார் வங்கியாகும். திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கியின் கோல்கட்டா கிளைகளில் 14 புரொபேஷனரி கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கலை போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரை இயக்குவதில் நல்ல திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
இதர விபரங்கள்: சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை South Indian Bank என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன், வயது, கல்வி ஆகியவற்றுக்கான சான்றுகளின் சுய உறுதியளிக்கப்பட்ட கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு 10.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the post of PRO.Clerks என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The South Indian Bank Ltd.,
Regional Office,
Jayasree Inn, 1st Floor,
38 G.G., Avenue, KOLKATTA - 700013.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதி நாள் : 10.11.2011
இணையதள முகவரி: www.southindianbank.com/UserFiles/KOLKATA_ANNEXURES.pdf
please comment!!!தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கலை போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரை இயக்குவதில் நல்ல திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
இதர விபரங்கள்: சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை South Indian Bank என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன், வயது, கல்வி ஆகியவற்றுக்கான சான்றுகளின் சுய உறுதியளிக்கப்பட்ட கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு 10.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the post of PRO.Clerks என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The South Indian Bank Ltd.,
Regional Office,
Jayasree Inn, 1st Floor,
38 G.G., Avenue, KOLKATTA - 700013.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதி நாள் : 10.11.2011
இணையதள முகவரி: www.southindianbank.com/UserFiles/KOLKATA_ANNEXURES.pdf
உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.
செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, "பினைன் கட்டி' என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். "மெலிக்னன்ட் கட்டி' தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.
கேன்சர் வர காரணங்கள்
* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், "பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா' என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.
இதய கட்டிகளில், "மிக்சோமா' என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.
மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, "மைட்டிரல் ஸ்டெனோசிஸ்' என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், "எண்டோ கார்டைட்டிஸ்' என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.
முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.
மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
please comment!!!செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, "பினைன் கட்டி' என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். "மெலிக்னன்ட் கட்டி' தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.
கேன்சர் வர காரணங்கள்
* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், "பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா' என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.
இதய கட்டிகளில், "மிக்சோமா' என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.
மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, "மைட்டிரல் ஸ்டெனோசிஸ்' என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், "எண்டோ கார்டைட்டிஸ்' என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.
முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.
மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நியூயார்க்: உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டுகிறது. ஐ.நா., மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும்.
எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை. இவ்வாறு பபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியுள்ளார்.
உ.பி.,யில் விழா: வரும் 31ம்தேதி, மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதால் இதற்கான விழாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. "பிளான்' என்ற சர்வதேச அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் குறிப்பிடுகையில், " உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது. பஞ்சாபில் இந்த நிலை இன்னும் மோசம். அங்கு ஆயிரம் பையன்களுக்கு 846 சிறுமிகள் என்ற விகிதாசாரம் காணப்படுகிறது. உ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளோம். 700வதுகோடி குழந்தைக்கு சான்றிதழும் அளிக்க உள்ளோம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமைய உள்ளது' என்றார்.
please comment!!!
காற்றைப்போல ஊழலும், லஞ்சமும் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. என்றாலும், நமது நாட்டில் லஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் "ஒருவிதத் திறமை'யாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இத்தகைய சேட்டைகளைச் செய்துவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்வது சாகசக் கலையாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஈடுபடுவோர் சாதிக்கத் தெரிந்தோராகப் பார்க்கப்படுகின்றனர். சான்றிதழ் வாங்குவதிலிருந்து சகலத்திலும் தொடரும் லஞ்சம், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என்பதில் தன் உச்சக்கட்ட கைவரிசையைக் காட்டியது. அதேபோலத்தான் ஊழலும். எந்தத் துறை, எந்தப் பதவி என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும், பதவிகளிலும் அது தன் கைங்கர்யத்தைக் காட்டி தனியாட்சி நடத்துகிறது. ஒழுக்கமும் மனித நேயமும் பின்தங்கினாலும் பரவாயில்லை. வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்போதும் என்றே மேல்நிலைப் பதவிகளில் உள்ளோர்கூட கீழான செயல்களைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதன் விளைவுதான் லஞ்சமும், ஊழலும். பணம், பதவி, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் அடிமைப்படுகிறார்கள். நாளடைவில் எந்தக் காரியம் என்றாலும் அதில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே அவர்களின் முழுக் கவனமும் பதியத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய தவறான செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுவோர் சிறிதும் வெட்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி புன்னகையுடன் நடப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் தவறுகள் அனைவருக்கும் தெரிந்தாலும்கூட தங்களை நேர்மையாளர்கள், பரிசுத்தவான்கள்போல வேதம் ஓதி தங்கள் சாத்தான் முகங்களை அவர்கள் எளிதாக மறைத்துக் கொள்கின்றனர். "உழைக்காமல் உண்பவன் திருடன்' என்றார் நம் தேசப்பிதா. அதனால்தானோ என்னவோ ஊழல்வாதிகளும், லஞ்சப் பேர்வழிகளும் நேர்மையாளர்களைவிட அதிகமாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களின் கடின உழைப்பும், கவனமும் இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கும், பிறகு கைது, தண்டனை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்குமே உதவுகின்றன. லஞ்சம், ஊழலைக் கண்டிப்பாக ஒழித்தே தீர வேண்டும் என நமது அரசியல்வாதிகள் ஆவேசமாக முழங்குகிறார்கள் என்றால் ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்படும் ஊழல் குழிதோண்டிப் புதைக்கப்படப்போகிறது என்றோ, விரைவில் இன்னொரு மெகா ஊழல் வெளிவரப்போகிறது என்றோதான் அர்த்தமாகிறது. இதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நமது நாட்டில் நடந்த பெரிய ஊழல்கள் என எடுத்துக்கொண்டால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலவற்றை மட்டுமே நினைவுகூரலாம். ஆனால், அண்மைக்காலத்தில் பெரிய ஊழல்கள் ஆண்டுதோறும் என்பதிலிருந்து மாறி மாதந்தோறும் என வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று மிஞ்சும்விதமாக வெளிவரும் ஊழல்கள் தேச நலனில் அக்கறை கொண்டிருப்போரை மிகுந்த கவலைக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்குகின்றன. வெறும் சட்டம் இயற்றி ஊழலை ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், லஞ்சம், ஊழல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து அதிகபட்ச தண்டனை தருவதன் மூலம் இக் குற்றங்களைப் பெருமளவு குறைக்க முடியும். தனக்கு நன்மை செய்யும் ஊழல் பல கோடி மக்களைப் பாதிக்கிறது என்பதை அதில் ஈடுபடுவோரும் மனசாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். எண்ணெய் ஊழல், பீரங்கி ஊழல், சுரங்க ஊழல், அலைக்கற்றை ஊழல் எனத் தொடரும் மெகா ஊழல்களின் பட்டியல் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன. "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என நமது தாய்த்திருநாட்டின் இயற்கை வளங்களின் பெருமைகள் குறித்து எளிய வரிகளில் எடுத்துரைத்தார் கவிஞர் ஒருவர். இன்றோ இயற்கை வளங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நாட்டின் வளத்தை தங்களால் முடிந்த அளவுக்கு ஊழலின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். யுகம்தோறும் அரக்கர்கள் பலரை அழிக்க கடவுள் பத்து அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஊழல் என்ற ஒரேயொரு அரக்கனை அழித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே கடவுள் பத்து அவதாரம் எடுக்க வேண்டுமோ என்றே தோன்றுகிறது.
please comment!!!
பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா?
பிரபஞ்ச வெளியில், நமது சூரியனைப் போல சிறியதும் பெரியதுமான ஏராளமான சூரியன்கள் இருப்பது தெரிந்த ஒன்றுதானே! இவற்றில், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள "கிளைஸ் 581' என்ற சிவப்புக் குள்ள நட்சத்திரமும் ஒன்று. துலா விண்மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஆறு கிரகங்கள் வலம் வருகின்றன. இவற்றுக்கு கிளைஸ் 581 பி, சி, டி, இ, எஃப், ஜி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இவற்றில் கிளைஸ் 581 ஜி என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அண்மையில் கலிஃபோர்னியா சாண்டாகுரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஓலைக்கூரைகளின் ஊடாக ஊடுருவும் சூரிய ஒளி கீழே தரையில் வட்டங்கள் வட்டங்களாக மட்டுமே விழுவது ஏன்?
ஓலைக்கூரைகளில் உள்ள துவாரங்கள், துளைகளின் வடிவங்கள் எப்படி இருந்தாலும் ஒளி கீழே தரையில் வட்டப் பொட்டுகளாக மட்டுமே விழும். வட்ட வடிவமாக சூரியன் இருப்பதால்தான் இப்படித் துளைகளின் ஊடாக வருகின்ற சூரிய ஒளிக்கதிர்கள் வட்ட வடிவமாக, சூரியனின் ஏராளமான பிம்பங்களைக் கீழே வீழ்த்துகின்றன.
காஸ்மிக் கதிர்களைப் பற்றித் தெரியும்? அதென்ன காஸ்மிக் ஆண்டு?
பால் வீதியில் பல நூறு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. சூரியனைச் சுற்றி நமது பூமி உட்பட எட்டு கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு வலம் வருகின்றன. அதுபோலவே பால்வீதியின் மையத்தை அச்சாக வைத்து எல்லா நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன.இவற்றில் சூரியன் தன் எட்டு கோள்களோடும் சேர்ந்த பால் வீதியில் சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவே காஸ்மிக் ஆண்டு ஆகும்.பால்வீதியின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வினாடிக்கு 220 கீலோ மீட்டர் வேகத்தில் சூரியன் அசைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சூரியன் ஒரு தடவை சுற்றிவர சுமாராக 250 மில்லியன் ஆண்டுகல் ஆகின்றன. எனவே ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.விஞ்ஞானிகள் வாஸ்ப் 12-பி என்ற கோளை 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்தக் கோளில் கார்பன் மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு நிறைய வைரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அங்கே ஒரு முறை போய் திரும்பி வந்தால் பெரும் பணக்காரராக ஆகி விடலாம்! ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது...இந்தக் கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டர் தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு) அப்படியானால் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை...
please comment!!!
பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,
"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. "பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே
எங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அ.தி.முக., | திமு.க., | தே.மு.தி.க., | ம.தி.மு.க., | காங்கிரஸ் | பா.ஜ., | |
---|---|---|---|---|---|---|
மாநகராட்சிகள் | ||||||
மேயர்(10) | 6 | 0 | ||||
சென்னை(200) | 162 | 23 | 1 | 1 | ||
மதுரை(100) | 50 | 9 | ||||
கோவை (100) | 60 | 8 | 1 | 1 | 2 | 2 |
திருச்சி (65) | 42 | 16 | 1 | 3 | ||
சேலம் (60) | 50 | 8 | ||||
திருநெல்வேலி (55) | 11 | 4 | 1 | |||
திருப்பூர் (60) | 1 | |||||
ஈரோடு (48) | 11 | |||||
தூத்துக்குடி (60) | 28 | 17 | 4 | 1 | ||
வேலூர் (60) | 23 | 15 | 3 | 4 | ||
நகராட்சிகள் | ||||||
தலைவர்கள் (150) | 89 ( 30 முன்னிலை) | 23 ( 7 முன்னிலை) | 2 | 1 | 2 | |
உறுப்பினர்கள் (3,697) | 1.452 | 613 | 110 | 47 | 139 | 34 |
பேரூராட்சி | ||||||
தலைவர்கள் ( 529) | 280 | 110 | 3 | 7 | 24 | 13 |
உறுப்பினர்கள் (8,303) | 2,763 | 1,671 | 370 | 82 | 363 | 178 |
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 1989ல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் செபி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் நிறுவனமாகும்.
எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் மொத்தம் 35 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலை அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப் படிப்பு, முது நிலை பட்டப்படிப்பு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் நல்ல பரிச்சயம் தேவைப்படும். விற்பனை மற்றும் வணிக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. நேர்காணல் தேர்வு மூலமாக இந்தப் பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்: எல்.ஐ.சி., நோமுரா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை "LIC NOMURA MF AMC LTD.," என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பின்னர் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து இதனுடன் சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், டி.டி., வயதுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the Post & LIC Nomura MF Relationsip Managers என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் மொத்தம் 35 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலை அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப் படிப்பு, முது நிலை பட்டப்படிப்பு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் நல்ல பரிச்சயம் தேவைப்படும். விற்பனை மற்றும் வணிக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. நேர்காணல் தேர்வு மூலமாக இந்தப் பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்: எல்.ஐ.சி., நோமுரா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை "LIC NOMURA MF AMC LTD.," என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பின்னர் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து இதனுடன் சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், டி.டி., வயதுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the Post & LIC Nomura MF Relationsip Managers என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
The AGM, Recruitment Cell,
LIC NOMURA Mutual Fund AMC Ltd.,
4th Floor, Industrial Assurance Bldng.,
Opp.Church Gate Station,
MUMBAI 400 020.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.10.2011
இணையதள முகவரி : licnomuramf.com/pdf/advertisment.pdfplease comment!!!
1934ல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில் சர்வ தேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. மொழி, கலை, மொழியியல், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்த கவுன்சில் உதவி வருகிறது.
பிரிட்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நல்லதொரு உறவை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த கவுன்சில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் ஸ்காலர்ஷிப்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவைகள்: இந்தியாவில் குடியிருக்கும் பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு இள நிலை மற்றும் முது நிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தலைமைப் பண்புகளைப் பெற்றவர் என்பதற்கு சான்றாக சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூலமாக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்கான ஆர்வமும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியில் சரளமாகப் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். 31.12.2011 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப்பிற்கு தேர்ந்தெடுத்து அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புது டில்லியில் நடத்தப்படும் நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். இது குரித்த முழுமையான விபரங்களைப் பெற இந்த அமைப்பின் இணையதளம் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Vishu Sharma,
Scholarships,
British Council,
17, Kasturba Gandhi Marg,
New Delhi 110 001.
INDIA.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2011
இணையதள முகவரி : www.britishcouncil.org/india&scholarships&drmanmohansing.htm#prog

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இள நிலை எழுத்தர் பணி இடங்கள் 22ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: பாராளுமன்றத்தின் ஜூனியர் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேவைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் டைப் செய்பவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
அதே போல் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வு சென்னை, கோல்கட்டா, மும்பை ஆகிய மையங்களில் நடைபெறலாம் என்று தெரிகிறது. முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் கையொப்பமிட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது 'Junior Clerk, Advertisement No.5/2011" என்று குறிப்பிட வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 08.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது 'Junior Clerk, Advertisement No.5/2011" என்று குறிப்பிட வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 08.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
The Joint Recruitment Cell,
Room No.521,
Parliament House Annexe,
New Delhi 110001.
இணையதள முகவரி : http://164.100.47.132/JRCell/Module/Notice/advt.5&2011.pdf"
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 08.11.2011
please comment!!!
புதுடில்லி: சரக்கு ரயில் கட்டணத்தைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணமும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.
ரயில்வே துறையில், நிதி ஆதாரத்தை சரிகட்டுவது தொடர்பாக, கடந்த வாரம், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சரக்கு ரயில் கட்டணத்தை, 6 சதவீதம் உயர்த்த, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை, சுற்றறிக்கையாக வெளியிட்டு அமல்படுத்தியது ரயில்வே நிர்வாகம்.ரயில்வே மூலம் அனுப்பப்படும் சரக்குக் கட்டணங்கள், 6 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணத்தையும் உயர்த்துவது குறித்து, ரயில்வே நிர்வாகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ரயில்வே நிதி கமிஷனர் பொம்பா பாபர் கூறியதாவது:கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பயணிகளின் கட்டண விஷயத்தில், அதிகப்படியான மானிய சலுகை அளிக்கப்பட்டதால், ஏகப்பட்ட நிதி ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.கட்டுமானப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு, ரயில்வே துறைக்கு, 57 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது, ரயில்வேயிடம் நிதி கையிருப்பு மிகக்குறைவாக உள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, நிதியமைச்சகத்திடம், 2,100 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளோம். இது தொடர்பாக, நிதித்துறை செயலரிடம் பேசியுள்ளோம்.இதற்கு நிதியமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக ரயில்வே அமைச்சர் திணேஷ் திரிவேதியும், பிரணாப் முகர்ஜியும் விரைவில் சந்தித்து பேச உள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சாதகமான பலன் ஏற்படும் என நம்புகிறோம்.
காலியாக உள்ள ரயில்வே நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் மூலதன நிதியை பெருக்க முயற்சிக்கிறோம். வளர்ச்சி நிதி மூலம் பயணிகளுக்கான வசதிகள், போக்குவரத்து வசதிகள், ஊழியர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அரசிடம் கேட்டுள்ள கடன் போதுமானதாக இல்லையென்றாலும். அதிகளவில் வெளியில் கடன் பெற்று கடன்வலையில் சிக்கிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.ஏற்கனவே, மேற்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்க ஜப்பானிடம் கடன் பெற்றுள்ளோம். இதே போன்ற பணியை கிழக்கு பகுதி மார்க்கத்தில் மேற்கொள்ள, உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளோம். இந்த கடனையெல்லாம் திரும்ப செலுத்த வேண்டிய கடமை உள்ளது. ஆகவே அதிக கடன் சுமை என்பது ஏற்படாமல் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே செயல்பாட்டு திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவேறுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஆதாரம் அதிகம் தேவை. மேலும் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்கள் குறைப்பு பற்றியும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேவையில்லாத செலவினங்களை குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனினும் ஆறு மாத காலத்திற்கு பிறகு நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையுள்ளது.விரைவில் உயரும்: அரசிடம் நாங்கள் நிதி கேட்டால், அதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்த, யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனவே தான், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இதில் ஏழைகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, உயர் வகுப்பு கட்டணத்தை உயர்த்துவது குறித்து யோசித்து வருகிறோம். கட்டணத்தை முறைப்படுத்தும் திட்டமும் எங்கள் பரிசீலனையில் உள்ள விஷயம். உயர்த்தப்பட உள்ள கட்டணமும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதில், எச்சரிக்கையாக இருக்கிறோம். எனவே தான், அங்கொன்று இங்கொன்றுமாக கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.ரயில்வே பட்ஜெட் வரை இந்த கட்டண உயர்வுக்காக காத்திருக்க முடியாது. எனவே, உயர் வகுப்பு கட்டணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.இவ்வாறு பொம்பா பாபர் கூறினார்.
கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்வு பற்றி பேச்சே எழுப்பக் கூடாது என்ற நிலையில் மத்திய அரசு இருந்தது. குறிப்பாக, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்த போது, அது குறித்து அதிக அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக உள்ளது,'' என, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் (ஈகோ கிளப்) நாடக இயக்குனர் ராமராஜ் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும்; மனித குலம் வாழ தகுந்த சுற்றுச்சூழல் அப்போதுதான் சமச்சீராக இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் வெறும் 17 சதவீதம் மட்டுமே அடர் காடுகள் இந்தியாவில் உள்ளதாக சேட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இயற்கையின் பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளன, என சுற் றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், வன உயிரின வார விழா நடந்தது. இதில் விழிப்புணர்வு நாடகங்கள் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நடந்தன. நாடகத்தில் மாணவர்கள் பஞ்ச பூதங்கள் வடிவில் வேடமிட்டு நடித்தனர். பஞ்ச பூதங்கள் வடிவில் வந்தவர்கள்,""மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால், மனிதர்களை காக்க வேண்டிய நாங்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறி வருகிறோம்; இந்நிலை தொடர்ந்தால் படிப்படியாக நாங்கள் உலகை விட்டு சென்று விடுவோம்; எனவே மரங்களை வளருங்கள்,'' என அவை கூறுவது போல் நடித்தனர்.
இது குறித்து அமைப்பின் நாடக இயக்குனர் ராமராஜ் கூறியதாவது: காடுகள்தான் இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கு தாயாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பு வெகுவாக இன்று குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாகும். வளரும் தலைமுறையான கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவே எங்கள் முக்கிய நோக்கம். தற்போது எங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நாடகங்கள், வரும் காலத்தில் கோவையின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும். அதன் மூலம் வனங்களை பெருக்க முயற்சி செய்வோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.
please comment!!!இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும்; மனித குலம் வாழ தகுந்த சுற்றுச்சூழல் அப்போதுதான் சமச்சீராக இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் வெறும் 17 சதவீதம் மட்டுமே அடர் காடுகள் இந்தியாவில் உள்ளதாக சேட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இயற்கையின் பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளன, என சுற் றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், வன உயிரின வார விழா நடந்தது. இதில் விழிப்புணர்வு நாடகங்கள் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நடந்தன. நாடகத்தில் மாணவர்கள் பஞ்ச பூதங்கள் வடிவில் வேடமிட்டு நடித்தனர். பஞ்ச பூதங்கள் வடிவில் வந்தவர்கள்,""மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால், மனிதர்களை காக்க வேண்டிய நாங்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறி வருகிறோம்; இந்நிலை தொடர்ந்தால் படிப்படியாக நாங்கள் உலகை விட்டு சென்று விடுவோம்; எனவே மரங்களை வளருங்கள்,'' என அவை கூறுவது போல் நடித்தனர்.
இது குறித்து அமைப்பின் நாடக இயக்குனர் ராமராஜ் கூறியதாவது: காடுகள்தான் இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கு தாயாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பு வெகுவாக இன்று குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாகும். வளரும் தலைமுறையான கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவே எங்கள் முக்கிய நோக்கம். தற்போது எங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நாடகங்கள், வரும் காலத்தில் கோவையின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும். அதன் மூலம் வனங்களை பெருக்க முயற்சி செய்வோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.
வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

மதுரை : மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் ஏற்படுத்தித் தர மைக்ரோ இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது.
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது.
இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும்.

மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை அப்டேட் செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும்.
மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும்.
இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-16 என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
please comment!!!
சென்னை: உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை, வருவாய்த் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 1,628 குரூப்-2 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது.இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல், மார்ச் 28ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், கடந்த ஏப்ரல் முதல் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே, நேரடி பணி நியமனத்தினால், தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று கூறி, தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை பிறப்பித்தது. இதனால், தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகும், தேர்வுப் பட்டியல் வெளியாகவில்லை.
நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தேர்வுப் பட்டியலை வெளியிடக் கோரி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதன்பின், குரூப்-2 தேர்வு முடிவுகள், 7ம் தேதி வெளியிடப்படும் என்று, செல்லமுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் www.tnpsc.gov.in முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
please comment!!!
வாஷிங்டன்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூன்று பேருக்கு அமெரிக்காவி்ன் உயரிய விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருது பெறுவதற்கு 94பேர்கள் அடங்கிய பெயர்பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. இதில் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரி்ந்ததற்காக டாக்டர் கார்த்திக் ஏ. ஸ்ரீனிவாசன், சுமிதாபென்னாத்தூர், மற்றும் ஹரிஸ் சரோப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அதிபர் ஓபாமா விருது வழங்கிபாராட்டு தெரிவித்தார். இவர்களில் ஸ்ரீனிவாசன் அறிவியல் தொழில் துறையில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி குழுவின் தலைவராக உள்ளார்.சுமிதா பென்னாத்தூர் கலிபோர்னியா பல்கலைகழகத்தி்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பரிவில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சரோப் பயோமெடிக்கல் துறையின் தலைமப்பொறுப்பு வகித்து வருகிறார்.
please comment!!!ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும்.பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமலானதன் காரணமாக, 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ளனர். இதனால், தனித்தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த மாணவர்கள், 2012, செப்டம்பரில் நடைபெறும் தேர்வுக்குள், "அரியர்ஸ்' பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது, தேர்வுத்துறை விதிமுறைப்படி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு மற்றும் அதன்பின் செப்டம்பரில் நடைபெறும் தனித்தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத முடியும்.
நாளை துவங்கும் தனித்தேர்வை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் எழுதலாம். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், 2012 செப்டம்பருக்குள், தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில், 2013 மார்ச்சில் நடைபெறும் தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டியிருக்கும்.

தேர்ச்சி அடைந்த பாடங்கள் உட்பட, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும். பல ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, திடீரென புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதுவது, தனித்தேர்வு மாணவர்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கும்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வுத்துறை விதிமுறைப்படி, 2012, செப்டம்பர் தேர்வு வரை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதலாம். அதன்பிறகும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டுமெனில், தமிழக அரசின் அனுமதி தேவை.அதிகமான மாணவர்கள், "அரியர்ஸ்' வைத்திருந்தால், அவர்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி, அரசிடம் தேர்வுத்துறை அனுமதி கேட்கலாம். அரசு அனுமதித்தால், கூடுதலாக ஒரு பருவமோ அல்லது இரு பருவ தேர்வுகளுக்கோ மாணவர்கள் அனுமதிக்கப்படலாம். அரசு அனுமதி மறுத்தால், புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பில்77 ஆயிரம் பேர்:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள், நாளை துவங்குகின்றன. அக்டோபர் 1ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வை, 48 ஆயிரத்து, 696 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, 76 ஆயிரத்து, 828 மாணவர்களும் எழுதுகின்றனர்.
please comment!!!
சென்னை :""இந்தியாவில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்'' என்று, தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
இதில், இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் உள்ள இளைஞர்களில், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். புகையிலை பொருட்களை நுகர்வதால், வாய்புற்று நோய் உள்ளிட்ட 30 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை தயாரிக்கும் நிறுவனங்களும், இளைஞர்களை குறிவைத்தே தங்களது பொருட்களை தயாரிக்கின்றன.புகையிலை பயன்பாட்டை தடுக்க, டிச., 7, 2010ல் பிளாஸ்டிக் பொட்டலமாக விற்கப்படும் புகையிலை பொருட்கள், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை விற்க, மத்திய அரசு தடை விதித்தது. இச்சட்டம் மார்ச் 1, 2011 முதல் நடைமுறைக்கு வந்தது.ஆனால், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இது குறித்து 2010ல், தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், புகையிலை சட்டம் குறித்து கடைக்கார்களுக்கு தெரியவில்லை.அதனால், புகையிலை மற்றும் அதன் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.

சென்னை:தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை (லேப்-டாப்) கிராமப்புற மாணவர்களும் தடையோ, தயக்கமோ இல்லாமல் பயன்படுத்தும் வகையில், அவற்றில் தமிழ் ஒருங்குறியும் (யுனிகோடு), இயங்குமுறையும் (ஆபரேட்டிங் சிஸ்டம்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பலதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, இந்த நிதியாண்டில், 9.12 லட்சம் மடிக்கணினிகள் வாங்க, 912 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு, அதிகபட்ச பலன் கிடைப்பதற்காக, மடிக்கணினியில் ஏராளமான, அதிநவீன வசதிகள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தாலுகாக்களிலும், மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேவை அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்தின் கிளை இருக்க வேண்டும்.மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குமுறைகள் இருக்க வேண்டும். குறுந்தகடு பதிவி (டி.வி.டி., ரைட்டர்), நிழற்படக் கருவி (கேமரா), கம்பியில்லா (ஒயர்லஸ்) 2 ஜி ராம் மற்றும் 320 ஜிபி வன்தகடு (ஹார்டு டிஸ்க்) ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களால், இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். இவர்களால், ஆங்கிலத்திலேயே இருக்கும் மடிக்கணினி இயங்குமுறைகளை, கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலே கண்ட பல்வேறு வசதிகளோடு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில், தமிழ் ஒருங்குறியும், தமிழ் இயங்குமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விசைப்பலகையும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கொண்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள் (பான்ட்), கணினிக்கு உத்தரவு கொடுக்கப் பயன்படும், "டூல்ஸ்', கருத்தரங்குகளில் பயன்படுத்தப்படும், "பவர் பாயின்ட்', கணக்கு வழக்குக்கு உதவும், "ஸ்பிரட் ஷீட்' உள்ளிட்டவையும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தமிழ்நாடு, "வெர்ச்சுவல் அகடமி' வசம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் இதற்கான மென்பொருளை வடிவமைத்து, தயாரிப்பாளர்களிடம் தந்துவிட்டனர். அவர்கள், அதை மடிக்கணினியோடு இணைத்து வழங்கியுள்ளனர்.இதனால், கிராமப்புற மாணவர்களும், ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களும், தமிழிலேயே கணினியை கையாள விரும்புபவர்களும், எந்த விதமான தயக்கமும், தடையுமின்றி, இலவச மடிக்கணினியைக் கையாளலாம்.
please comment!!!மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. பிறப்பிலிருந்து, இறப்புவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நினைவுத்திறன் என்பது ஜீவாதாரமான அம்சமாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பலவகைப்பட்டதாய் இருந்தாலும், மனிதவாழ்வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத்திறன்தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், மாணவர் பருவத்தில், நினைவுத்திறன் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.
அதிக நினைவுத்திறன் உள்ள மாணவர், சாதனை மாணவராக ஆகிறார். எனவே, சிறந்த நினைவுத்திறன் என்பதை ஒரு பெரிய வரமாகவும், பொக்கிஷமாகவும் மாணவர் சமுதாயம் கருதுகிறது. இந்திய கல்வித்திட்டத்தில், ஒருவரின் படைப்புத்திறனை விட, அவர் புத்தகத்தில் படித்ததை எந்தளவிற்கு நினைவில் கொண்டுவந்து தேர்வில் எழுதுகிறார் என்பதில்தான், அந்த மாணவரின் திறமையும், அறிவும் நிர்ணயிக்கப்படுகிறது. அவரின் எதிர்காலம், அவர் 3 மணிநேரத்தில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, இங்கு நினைவுத்திறன்தான் அனைத்தும்,
அந்த நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் முதற்கொண்டு, அனைத்து பருவத்தினருமே, பலவிதமான முயற்சிகளை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில், அபார நினைவுத்திறன் என்பது ஒரு மந்திர சக்தியைப் போன்றது. அந்த மந்திர சக்திக்காக பலரும் கஷ்டப்பட நினைப்பது ஒன்றும் அதிசயம் அல்லவே. நினைவாற்றல் என்ற அந்த மந்திர சக்தியை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக் கொண்டு, சாதனையாளராகத் திகழலாம் என்பதற்கான, பலவித விரிவான ஆலோசனைகள் இங்கே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன.
முதல் நிலையில் பதிவுசெய்தல்முதல் நிலையில் பதிவுசெய்யாத அல்லது சரியான வகையில் பதிவுசெய்யாத சில விஷயங்களை, நினைவுத்திறனில் கொண்டுவர முடியாது. ஏராளமான மறதிப் பிரச்சினைகள் இந்தவகையைச் சேர்ந்தவை. உங்களுக்கு, சில வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டுகளோ, சில வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். சில நண்பர்களின் முகங்களோ அல்லது அவர்களின் பெயர்களோ நினைவில் வராமல் போகலாம். சில படங்களின் பெயர்களோ, நடிகர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், நீங்கள் அவற்றை உங்கள் நினைவுத்திறனின் முதல்நிலையில் பதிவுசெய்யாததுதான்.
எனவே தவறு நம் மீதுதான். ஒரு விஷயம் அந்தளவிற்கு முக்கியமற்றது என்று நாம் நினைப்பதால், அவற்றை நாம் முதல் நிலையில் பதிவு செய்வதில்லை. அப்படி பதிவுசெய்யதா விஷயங்களைத்தான் நம்மால் நினைவுற்கு கொண்டுவர முடிவதில்லை.
விஷயங்களைக் கோப்பாக்குதல்
ஒரு சிறந்த அலுவலக செயல்பாட்டிற்கு, கோப்பாக்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு விதமான கோப்பிற்கும் ஒரு தலைப்பு இருக்கும் மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தலைப்புகளைக் கொண்ட கோப்புகள், ஒரு பொதுப் பெயரில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். சிறந்த முறையில் கோப்பிடப்பட்டிருந்தால்தான், தேவைப்படும்போது, எளிதாக எடுக்க வசதியாக இருக்கும். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவை வகைப்படுத்தப்பட்டிருக்கும். பழைய கோப்புகள் பதிவு செய்யப்பட்டு தனியிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றும் முக்கிய பணியிடத்திலிருந்து சற்று தொலைவிலும் இருக்கும்.
கணினியில் கூட, விஷயங்கள் கோப்புகளில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மனித மூளையானது, பலவிதங்களில் கணினியைப் போன்றே செயல்படுகிறது. எனவே, சில விஷயங்களை முறையாக குறித்துக்கொண்டு அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள நாம் மூளைக்கு உத்தரவிட்டப் பிறகு, அவற்றை முறையாக கோப்பிடுவதற்கு நாம் மூளைக்கு உதவுவதும் முக்கியம். நினைவாற்றல் என்பதில், விஷயங்களை உடனே நினைவிற்கு கொண்டு வருதல் மிகவும் முக்கியம்.
ஒரு நபரை சந்திக்கையில், அவரது பெயரைச் சொல்லி அழைப்பதற்கு, அந்தப் பெயர் உடனடியாக நமக்கு நினைவில் வர வேண்டும். மேலும், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, பேச்சை நிறுத்தாமலேயே அடுத்தடுத்த விஷயங்களை நினைவில் கொண்டுவந்து, தொடர்ச்சியாகப் பேச வேண்டும். பேச வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து நினைவுப்படுத்துகையில், நினைவுக்கோப்புகளை களைத்துவிடக்கூடாது. எனவே, உடனடி நினைவுப்படுத்தலுக்கு, முறையான கோப்பாக்குதல் அவசியம்.
முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தல்ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது விழாவிலோ நமக்கு சில நபர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர்கள் ஒரு சம்பிரதாயத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களை இனிமேல் தொடர்புகொள்ள மாட்டோம் என்ற நிலை இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் முகங்களை முக்கியத்துவம் கொடுத்து, தனிப்படுத்தி நம் மூளையில் பதிவுசெய்ய மாட்டோம். எனவே, அந்தப் பெயர்களும், முகங்களும் நமக்கு மறந்துவிடும் அல்லது நினைவிற்கு கொண்டுவர முடியாதளவிற்கு எங்கேயோ சிக்கலான இடத்தில் பதிவாகிவிடும். எனவே, அதுபோன்ற நபர்களை நாம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவர முயன்றாலும் கோப்புகள் கலைக்கப்பட்டு, குழப்பப்பட்டு நமது முயற்சியில் நாம் தோல்வியடைந்து விடுவோம்.
ஆழ்மனதின் செயல்பாடுநமது ஆழ்ந்த பய உணர்வுகள், மனக் கவலைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவை உட்பொதிந்த நிலையில், நமது ஆழ்மனதில் இருக்கின்றன. இவை, முக்கியமான நேரங்களில் நமது வாழ்க்கையில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த உணர்வுகள், சாதாரண உணர் நிலையில் இருந்து, ஆழ் மனதிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆழ்மனதிற்குள் இருக்கும் விஷயங்கள், நமது அன்றாட வாழ்க்கை அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அந்தளவு தேவையில்லாத விஷயங்களை, உணர் நிலையானது, ஆழ்மனதிற்குள் மாற்றுகிறது. எனவே, மேலோட்டமான அறிவு நிலையானது, தேவையற்ற விஷயங்களால் நிரம்பிக் காணப்படுவதில்லை. அதேசமயம், தேவையான நேரத்தில் தகவலும் கிடைக்கிறது. இதன்மூலம், நமது மனம் எதையும் மறப்பதில்லை என்பது தெரிய வருகிறது. கணினி செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், நாம் ஒரு கோப்பை நீக்கினாலோ அல்லது அழித்தாலோ, அது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீங்குகிறதேயொழிய, முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அது ஒரு தனியிடத்தில் வைக்கப்பட்டு, தேவையானபோது எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆழ்மனம் என்பது நமது நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சாதாரண அறிவுநிலையைக் காட்டிலும், ஆழ்மனம் என்பது அதிகளவில் விஷயங்களை தன்னுள் வைத்துள்ளது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு வர இயலாதபோது, அவற்றை நினைவுப்படுத்த ஆழ்மனதின் உதவியை நாடுகிறோம். மேலும், நினைவுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம், ஆழ்மனதில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அது சாதாரண அறிவுநிலையிலும் இருக்கலாம். ஆழ்மனம் என்பது விஷயங்களை தேடுகிறது. பெரும்பாலும், நல்ல இரவு உறக்கத்திற்குப் பிறகு, நாம் தேடிய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.
சூழலும், பின்னணியும் முக்கியம்
நாம் ஒரு விஷயத்தை எப்போதும் தனியாக பார்ப்பதில்லை. அதனுடைய பின்னணி மற்றும் சூழல் ஆகியவற்றுடன் இணைந்தேப் பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மரத்தை நாம் பார்க்கையில், அதனுடன் இணைந்த பிற அம்சங்களையும் இணைத்தேப் பார்க்கிறோம். நாம் ஒரு வார்த்தையை மட்டும் தனித்துப் படிப்பதில்லை. அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய சூழல் மற்றும் பின்னணியையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள, தேவையான சூழலையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், சூழலும், பின்னணியும்தான், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றி பலவிதமான விஷயங்களை நினைவில் வைக்க உதவுகிறது. ஒரு கதையை நாம் நினைவில் நிறுத்துகிறோம் என்றால், தேவையான சூழல் மற்றும் பின்னணி அதில் இருக்கிறது. தனித்த ஒரு விஷயம் எப்போதுமே நினைவில் நிற்காது.
தொடர்புடையதாக மாற்றுங்கள்மூளையானது, நாம் பார்க்கும் விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பொருத்தமானதாக மாற்றுகிறது. நாம் ஒரு விஷயத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கிறோம். ஆனால், அறிவு அதை முப்பரிமாணத்தில் பார்க்கிறது.
ஒரு கவிதையை நமது மொழியில் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள நம்மால் முடிகிறது. ஆனால் நாம் அறியாத மொழியில் ஒரு வரியைக்கூட நினைவில் நிறுத்த முடிவதில்லை. தனக்கு தெரிந்த மொழிக்கே மூளை முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்துகையில், மூளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதை மாற்ற வேண்டும். அந்த வகையில் சில பொருத்தமான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, உருவமைப்பு, இணைப்பு, ஆர்வம், புலன்களால் அறியக்கூடிய அம்சம், உணர்வுப்பூர்வ நிலை மற்றும் காட்சிநிலை.
முழுமையான சேமிப்பு
ஒரு விஷயத்தை நமது மூளையானது, ஒரு தகவலை முழுமையாக சேமித்து வைத்துக்கொள்கிறது. எனவே ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதை எளிதாக நினைவுப்படுத்த முடியும் மற்றும் அவற்றை நமது மனக்கண்ணில் முழுமையாகப் பார்க்க முடியும்.
உதாரணமாக, ஒரு கதையை கேள்வி- பதில் பாணியில் படித்தால் அதைப் புரிந்துகொள்ள நமக்கு சிரமமாக இருக்கும். பதிலாக, முழு கதையை சாதாரண வடிவில் முழுமையாகப் படித்துவிட்டு, அந்த கேள்வி- பதில் பகுதியை பார்க்கையில் நமக்கு அனைத்தும் புரியும். எனவேதான், ஒரு விஷயத்தை பகுதி பகுதியாகப் பார்க்காமல், அவற்றை முழுமையான அம்சத்தில் பார்த்தால், அதன் எந்த அம்சத்தையும்நம்மால் எளிதில் நினைவில் கொண்டுவர முடியும்.
பாகங்களாகப் பிரித்து நினைவிலேற்றுதல்ஒரு வாகனத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் பாகங்களைப் பற்றி பிரித்துப் படித்து ஒரு முழு புரிதலுக்கு வருகிறோம். ஒரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதன் அரசியல் அமைப்பு, மொழி, கலாச்சாரம், புவியியல் உள்ளிட்ட பல அம்சங்களை ஒவ்வொன்றாக படித்து, முழு புரிதலுக்கு வருகிறோம். அதுபோலத்தான், ஒரு பெரிய பாடத்தை மனப்பாடம் செய்ய வேண்டுமெனில், அவற்றை பகுதி பகுதியாகப் பிரித்து படித்துப் புரிந்து மனனம் செய்தால் எளிதாக இருக்கும்.
விஷயங்களை முறைப்படுத்தல்நாம் நினைவில் கொள்ள நினைக்கும் விஷயங்களை, அப்படியே கொசசொசவென்று மனதில் ஏற்றினால், நினைவில் நிற்பது கடினம். எனவே, அவைகளை, வகைக்கேற்ப ஒழுங்குமுறைகளில் வரிசைப்படுத்தினால், நினைவில் ஏற்றுவதற்கு வசதியாகவும், எளிதாகவும் இருக்கும். தேவைப்படுகையில் மீண்டும் நினைவில் கொண்டு வருவது சுலபம்.
please comment!!!பொதுவாக ஓர் அரசாங்கம் பணப் பற்றாக்குறையை மூன்று வழிகளில் சமாளிக்கும், ஒன்று வரி அதிகரிப்ப, இரண்டு செலவுகளை குறைப்பது: மூன்று கடன் நெருக்கடியே சமாளிக்க இரண்டாவது வழியைத் தேர்ந்ததெடுத்திருக்கிறது. மூன்றவாது வழியையும்.
1950 தொடங்கி 1980 வரையிலான 30 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவின் நிதி நிலவரம் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு வருமானத்தை மீறிய செலவுகள். செலவுகளைச் சந்திக்கக் கூடுதல் கடன்: கூடுதல் கடனை அடைக்க வட்டியுடன் கடன் வட்டியை அடைக்கக் கடன் பிறகு கூடுதல் வட்டி. கூடுதல் கடன் இப்படியே இயந்திரத்தனமாக இயங்கி கொண்டிருந்தது அமெரிக்கா. சென்ற ஆண்டு 2.2 டிரில்லியன் டாலரை (ஒரு டிரில்லின் என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டி 3.5 டிரில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது. அமெரிக்கா. இந்த ஆண்டு விழி பிதுங்கி விட்டது.
ஏற்கெனவே நிதி நெருக்கடி டைஃபாய்ட் கொசுக்கடியாக இன்னொரு பக்கம் பிடுங்கி எடுத்து கொண்டிருக்கிறது. இதில் கடன் தொல்லை வேறு. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமானால், இவ்வளவுதான் கடன் வாங்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் உச்சபட்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு பராளுமன்தறத்தின் (காங்கிராஸ்) இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, ஆளுங்கட்சியன ஒபாமாவின் டெமாக்ர்டிக் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி சில சமரசங்களுடன் ஒரு புரொபோசலை உருவாக்கின. செனட் சபை இதனை ஏற்றுக் கொண்டது. இதற்கு முன்னாள் 14.3 டிரில்லியன் டாலர் என்பதே அமெரிக்காவின் கடன் உச்சவரம்பாக இருந்தது. இனி கூடுதலாக 2.1 டிரில்லியன் டாலர் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்பாடா என்று இப்போதைக்கு அமெரிக்கா மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்றாலும் இதில் சந்தோஷப்படுவதற்கு எதுவும் இல்லை. எதற்கும் இரண்டு மூன்று தடவை யோசித்துவிட்டு அந்தாளுக்கு கடன் கொடுப்பா நாளைக்கே கம்பி நீட்டிட்டா? வேடிக்கையல்லா உண்மையாகவே அமெரிக்காவை உலகம் இப்படித்தான் பார்க்கிறது. நிறைய கடன் கொடுத்து அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் திகிலில் இருக்கிறார்கள். பத்திரத்தைக் கொடுத்தால் அமெரிக்கா பணத்தைத் திருப்பிக் கொடுக்குமா? பயம் பற்றிக்கொண்டது.
கடன் பத்திரங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய நாடுகள் (உதாரணத்துக்கு சீனா) கொண்டா என் பணத்தை என்று பத்திரத்தை நீட்டினால் என்ன செய்வது? கடன் வாங்கித் திருப்பித் தர இயலாதவன் என்னும் அடையாளம் அல்லவா விழுந்து விடும்? இதனைத்தான் "டிஃபால்ட் ஆவது' என்று அழைப்பார்கள், ஒரு மூன்றாம் உலக நாடு டிஃபால்ட் ஆகலாம் உலக வல்லரவு?
மற்றொரு பக்கம், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இதே நேரம் பார்த்து பட்ஜெட்டும் உதைத்தது மிஸ்டர் ஒபாமா, ஏதாவது செய்யுங்கள் உடனே! சொல்லிவைத்தாற் போல் டாலரின் மதிப்பும் குறைய ஆரம்பித்து. என்வேதான் அழுத்தம் தாங்கமால் நீட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுக்கொடுத்து விட்டார் ஓபாமா. ஆனால் பிரச்னை அவ்வளவு சீக்கிரம் தீரவில்லை. கடன் வாங்கினால் மட்டும் போதாது. செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள் பொருளாதர நிபுணர்கள், செலவுகள் என்றால் மக்கள் நலத் திட்டங்கள். இதற்கு ஒப்புக் கொண்டார் ஒபாமா. ஆக கடனுக்குக் கடன், நலத் திட்டங்களுக்கு வெட்டு போடுவதன் மூலம் லாபத்துக்கு லாபம் போதாது?
மக்கள் நலப்பணிகளை ரத்து செய்வது என்றால் என்ன? உதாரணத்துக்கு மின சோட்டாவில் வேலையில்லாதவர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் இருந்தது. பல்லாயிரக்காணக்கான இளைஞர்கள் அரசிடம் இருந்து உதவித் தொகை பெற்று வந்தனர். இனி இது இருக்காது. இல்லினாய்ஸ் பகுதியில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இனி கிடையாது ஜார்ஜியாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரத்து. அலபாமாவில் உள்ள நீதிமன்ற அலுவலகங்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு இந்த மாத இறுதிக்குள் வேலை போய்விடும்.
நியூயார்க் நீதிமன்றம் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. ஃப்ளோரிடாவில் அரசாங்கம் படிப்படியாகத் தனது பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டு, பல துறைகளில் தனியார்களை நியமித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று சிறை நிர்வாகம், ஜனவரி 1, 2012க்குள் 30 சிறைச்சாலைகளை முழுமையாக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். என்று அரசு தவணை கொடுத்துள்ளது. அதே போல் குற்றவாளிகள் சீர் திருத்தத்துறையும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் 7 சத விகித செலவுகளைக் குறைக்க முடியுமாம். இவை சில உதாரணங்கள் மட்டுமே.
மொத்தத்தில், அமெரிக்கா சரிந்துபோன தனது சீட்டுக் கட்டு மாளிகையைத் தூக்கி நிறுத்த மேலும் சில சீட்டுகளையே இந்த முறையும் பயன்படுத்தியுள்ளது. அதுவும் கடன் வாங்கிய சீட்டுகள். புயல் எல்லாம் வேண்டாம் ஃப்பூ என்று கிட்டே போய் ஊதினாலோ போதும் மீண்டும் மாளிகை சரிந்துவிடும். சாதா மாளிக்கைக்கு மட்டுமல்ல வெள்ளை மாளிகைக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் எதிரொலி:
அமெரிக்கா ஹச்சென்றால் உலகம் முழுவதற்கும் குளிர் காய்ச்சல் பரவி விடும் அந்த அளவுக்கு அமெரிக்க நிதிச் சந்தை உலக நிதிச் சந்தையோடு பின்னிப் பிணைந்துள்ளது. உலகப் பங்குச் சந்தையை அமெரிக்க டாலர்தான் இன்று வரை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. டாலர் சரிந்தால் எண்ணெய் விலை சரியும். பங்குச் சந்தை ஆட்டம் காணும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீகளை அவசரமாக இழுத்துக் கொள்வார்கள். பங்குகள் விலை சரியும். ஆசியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனாடில் பங்கும் பெரும் விழ்ச்சியடைத்துள்ளன.
இந்தியாவில் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இந்த அளவுக்குக் கடுமையான சரிவு ஏற்பட்டதில்லை. டாலர் தன் நிலைத்தன்மையை இழந்து கொண்டிருப்பதாக அஞ்சிய பலரும் தங்கத்தை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். அதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. பத்து கிராமம் தங்கத்தின் விலை 25,000. முதலீட்டாளர்கள் கொந்தளிக்க வேண்டாம். என்று பிராணப் முகர்ஜி அவசர அவசரமாக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார். நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ரிசர்வ் வங்கியும் இந்திய அரசும் ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருக்கின்றன..
"ரேடிங்'னா என்ன?:
கையில் பணம் இல்லாவிட்டால் நாம் கடன் வாங்குவதைப் போலவே நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் அரசாங்கங்களும் தங்கள் தேவைக்காகக் கடன் வாங்குவது வழக்கம். அமெரிக்கா தம் தேவைகளுக்காக நீண்ட காலமாகக் கடன் பெற்று வந்துள்ளது. பதிலுக்கு ரசீது போல் கடன் பத்திரங்களை அமெரிக்கா வழங்குவது வழக்கம். இந்தப் பத்திரங்களுக்கு நல்ல வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படும் என்பதால் பல வர்த்தகர்களும் நாடுகளும் அமெரிக்கக் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கிக் குவித்துள்ளன. தேவைப்படும் போது பத்திரங்களைத் திரும்பப் பெற்று வட்டியோடு கடனை பெற்றுக் கொள்ளலாம் என்பது ஏற்பாடு.
எந்த அடிப்படையில் கடன் தருவது? கடனைத் திருப்பித் தரும் சக்தி அவர்களுக்கு இருக்கிறதா? அமெரிக்கா என்பதாலோ பெரும் நிறுவனம் என்பதாலோ மட்டும் கடன் கொடுத்துவிட முடியுமா? இந்த இடத்தில்தான் தர நிர்ணயத்துக்கான தேவையும் தர நிர்ணயம் செய்யும் அமைப்புகளின் தேவையும் ஏற்படுகின்றன. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற தர நிர்ணய நிறுவனங்களுள் ஒன்று,
இவர்கள் கடன் பெறுவோரின் நிதி நிலைமையைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் ஏஏஏ,ஏஏ, ப்ளஸ், ஏஏ,ஏஏ நெகடிவ் என்று நிர்ணயம் செய்து வருகிறார்கள். பிபிபி தரத்துக்குக் குறைவாகப் பெற்றவர்களுடன் பொதுவாக யாரும் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அமெரிக்காவுக்கு இதுவரை ஏஏஏ என்னும் உயர்ந்த அந்தஸ்து இருந்து வந்தது. இப்போது அது ஏஏ ப்ளஸ் என்று சுருங்கிவிட்டது. இதுபோலவே மூடீஸ், ஃபிட்ச் ஆகிய தர நிர்ணய நிறுவனங்களும் இருக்கின்றன. அவை அமெரிக்காவின் கடன் பத்திரங்களின் மதிப்பீட்டைக் குறைக்கவில்லை.

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
இனப்பெருக்கம் மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம். பாக்டீரியா திசுப்பிளவு ஓர் இனத்திலுள்ள்...
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள் , 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும் ...
-
மொகெஞ்சதாரோ மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள் * யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் க...
-
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது