Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » பிரபஞ்ச வெளியில் வைரக் கோள்!

பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா?
பிரபஞ்ச வெளியில், நமது சூரியனைப் போல சிறியதும் பெரியதுமான ஏராளமான சூரியன்கள் இருப்பது தெரிந்த ஒன்றுதானே! இவற்றில், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள "கிளைஸ் 581' என்ற சிவப்புக் குள்ள நட்சத்திரமும் ஒன்று. துலா விண்மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஆறு கிரகங்கள் வலம் வருகின்றன. இவற்றுக்கு கிளைஸ் 581 பி, சி, டி, இ, எஃப், ஜி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இவற்றில் கிளைஸ் 581 ஜி என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அண்மையில் கலிஃபோர்னியா சாண்டாகுரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
ஓலைக்கூரைகளின் ஊடாக ஊடுருவும் சூரிய ஒளி கீழே தரையில் வட்டங்கள் வட்டங்களாக மட்டுமே விழுவது ஏன்? 
ஓலைக்கூரைகளில் உள்ள துவாரங்கள், துளைகளின் வடிவங்கள் எப்படி இருந்தாலும் ஒளி கீழே தரையில் வட்டப் பொட்டுகளாக மட்டுமே விழும். வட்ட வடிவமாக சூரியன் இருப்பதால்தான் இப்படித் துளைகளின் ஊடாக வருகின்ற சூரிய ஒளிக்கதிர்கள் வட்ட வடிவமாக, சூரியனின் ஏராளமான பிம்பங்களைக் கீழே வீழ்த்துகின்றன. 
காஸ்மிக் கதிர்களைப் பற்றித் தெரியும்? அதென்ன காஸ்மிக் ஆண்டு?
பால் வீதியில் பல நூறு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. சூரியனைச் சுற்றி நமது பூமி உட்பட எட்டு கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு வலம் வருகின்றன. அதுபோலவே பால்வீதியின் மையத்தை அச்சாக வைத்து எல்லா நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன.இவற்றில் சூரியன் தன் எட்டு கோள்களோடும் சேர்ந்த பால் வீதியில் சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவே காஸ்மிக் ஆண்டு ஆகும்.பால்வீதியின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வினாடிக்கு 220 கீலோ மீட்டர் வேகத்தில் சூரியன் அசைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சூரியன் ஒரு தடவை சுற்றிவர சுமாராக 250 மில்லியன் ஆண்டுகல் ஆகின்றன. எனவே ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.விஞ்ஞானிகள் வாஸ்ப் 12-பி என்ற கோளை 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்தக் கோளில் கார்பன் மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு நிறைய வைரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அங்கே ஒரு முறை போய் திரும்பி வந்தால் பெரும் பணக்காரராக ஆகி விடலாம்! ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது...இந்தக் கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டர் தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு) அப்படியானால் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை...
please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply