Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் பதவி

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 1989ல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் செபி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் நிறுவனமாகும்.
எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் மொத்தம் 35 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலை அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப் படிப்பு, முது நிலை பட்டப்படிப்பு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் நல்ல பரிச்சயம் தேவைப்படும். விற்பனை மற்றும் வணிக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. நேர்காணல் தேர்வு மூலமாக இந்தப் பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்: எல்.ஐ.சி., நோமுரா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை "LIC NOMURA MF AMC LTD.," என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பின்னர் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து இதனுடன் சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், டி.டி., வயதுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the Post & LIC Nomura MF Relationsip Managers என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The AGM, Recruitment Cell,
LIC NOMURA Mutual Fund AMC Ltd.,
4th Floor, Industrial Assurance Bldng.,
Opp.Church Gate Station,
MUMBAI 400 020.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.10.2011
இணையதள முகவரி : licnomuramf.com/pdf/advertisment.pdfplease comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply