Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » 80 சதவீத இளைஞர்கள் புகையிலை பழக்கத்தால் பாதிக்கின்றனர்:தன்னார்வ நல குழும இயக்குனர் அறிவிப்பு

சென்னை :""இந்தியாவில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்'' என்று, தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
இதில், இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் உள்ள இளைஞர்களில், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். புகையிலை பொருட்களை நுகர்வதால், வாய்புற்று நோய் உள்ளிட்ட 30 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை தயாரிக்கும் நிறுவனங்களும், இளைஞர்களை குறிவைத்தே தங்களது பொருட்களை தயாரிக்கின்றன.புகையிலை பயன்பாட்டை தடுக்க, டிச., 7, 2010ல் பிளாஸ்டிக் பொட்டலமாக விற்கப்படும் புகையிலை பொருட்கள், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை விற்க, மத்திய அரசு தடை விதித்தது. இச்சட்டம் மார்ச் 1, 2011 முதல் நடைமுறைக்கு வந்தது.ஆனால், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இது குறித்து 2010ல், தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், புகையிலை சட்டம் குறித்து கடைக்கார்களுக்கு தெரியவில்லை.அதனால், புகையிலை மற்றும் அதன் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.
please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply