Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » பாராளுமன்றத்தில் கிளரிகல் பதவி

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இள நிலை எழுத்தர் பணி இடங்கள் 22ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: பாராளுமன்றத்தின் ஜூனியர் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேவைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் டைப் செய்பவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
அதே போல் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வு சென்னை, கோல்கட்டா, மும்பை ஆகிய மையங்களில் நடைபெறலாம் என்று தெரிகிறது. முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் கையொப்பமிட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது 'Junior Clerk, Advertisement No.5/2011" என்று குறிப்பிட வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 08.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Joint Recruitment Cell,
Room No.521,
Parliament House Annexe,
New Delhi 110001.
இணையதள முகவரி : http://164.100.47.132/JRCell/Module/Notice/advt.5&2011.pdf"
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 08.11.2011
please comment!!!

«
Next
பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஸ்காலர்ஷிப்
»
Previous
விரைவில் ரயில் பயணிகள் கட்டணம் உயருகிறது : பற்றாக்குறையில் தத்தளிப்பதால் நடவடிக்கை

No comments:

Leave a Reply