Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » ராணுவ ஆட்சேர்ப்பு

யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருநெல்வேலி : யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், போர் விதவையர், விதவையர்களின் மகன்கள் மற்றும் படை வீரர்களின் சகோதரர்கள் ஆகியோருக்கு யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு வரும் 13ம் தேதி முதல் ஏ.எம்.சி சென்டரில் நடக்கிறது. இதில் சோல்ஜர் ஜி.டி பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி 45 சதவீத மார்க், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 32 மார்க் பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.சி பாட திட்டத்தில் படித்திருந்தால் 45 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். வயது 17 அரை வயது முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். சோல்ஜர் டிரேஸ்ட்மேன் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஹவுஸ் கீப்பர் மற்றும் மெஸ் கீப்பர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 17 அரை வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் உயரம் 166 செ.மீ, மார்பளவு 77 செ.மீ, 50 கிலோ எடை இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று உதவி இயக்குனர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply