தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி
Posted by: MSB Posted date: 15:33 / comment : 0
சமச்சீர் கல்வி: முதல்வர் விளக்கம்
சென்னை, ஜூன்.7: 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை (திருத்தச்) சட்டமுன்வடிவு மீதான விவாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.பேரவையில் அவர் ஆற்றிய உரை:
இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தும்போதே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இதை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத் தெரிவித்தார். இது சம்பந்தமாக அவருடைய கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஏற்கெனவே இந்த அவையில் என்ன பேசியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிவிப்பது பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். சமச்சீர் கல்வித் திட்டம் மிக அவசரமாகச் செயல்படுத்தக்கூடியது அல்ல. அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவேண்டுமெனில் டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதைத்தான் இந்த சட்டம் இந்த மன்றத்திலே அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து கட்சிகளும் எடுத்துக் கூறியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. மணி அவர்கள் தெரிவித்த கருத்தை நான் இங்கே நினைவுபடுத்த விழைகிறேன்.
தமிழக அரசின் சார்பிலே சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இப்போது கொண்டு வந்திருக்கிற இந்தச் சட்டமுன்வடிவிலே மிகப்பெரிய திருத்தங்கள் எல்லாம் செய்யப்படவேண்டும். இப்போது நீங்கள் கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது. பிரிவு வாரியாக என்று சொன்னால் நிறைய சொல்லலாம். இருந்தாலும்கூட டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீங்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும். இப்போதே நிறைவேற்றாமல் கல்வி வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்து, கருத்துக் கேட்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட கருத்து. இதில் அவர்கள் நிற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெரிவித்தால் நல்லது.
இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுகின்றபோது, ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அல்ல. 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு மட்டும்தான். ஆகவே, முழுமையாக மறுபரிசீலனை செய்து முழுமையான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்களுடைய எண்ணம்.
இவ்வாறு ஜெயலலிதா உரையாற்றினார்.
please comment!!!

About MSB

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Related
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா? உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க ...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இனப்பெருக்கம் மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம். பாக்டீரியா திசுப்பிளவு ஓர் இனத்திலுள்ள்...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
அ அகலாங்கு Latitude அடர்த்தி Density அடிக்கூறு Essential அடிக்கூறுபிரித்தல் Essentialisation அடுக்களம் Basis (of Space) அடுக்குக்கணம் Power ...
-
வென் படம் என்பது கணங்களின் முடிவுறு தொகுப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய தொடர்புகளைப் பற்றிய விளக்கப் படமாகும். 1880களில் பிரித்தானிய தர்க்க...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: