Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
please comment!!!


விண்வெளியில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட சிறு கிரகம் ஒன்று இருப்பதை சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது கண்டுபிடித்தனர். இந்த புதிய கிரகத்துக்கு அவர்கள் 2011 எம்.டி. என்று பெயரிட்டுள்ளனர்.

ஆம்னி பஸ் அளவுக்கு இருக்கும் இந்த குட்டி கிரகம், பூமியை சுற்றி வர 396 நாட்கள் எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி கிரகம் இன்று (திங்கள்) பூமிக்கு மிக, மிக அருகில் வர உள்ளது.

இன்று பிற்பகல் இந்த கிரகம் பூமியில் இருந்து 7 ஆயிரத்து 500 மைல் தொலைவுக்குள் நெருங்கி வர உள்ளது. இன்று மாலை 6.56 மணிக்கு அந்த குட்டி கிரகம் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி அருகில் வந்து கடந்து செல்லும்.

பூமிக்கு அருகில் வரும் இந்த குட்டி கிரகத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஒரு வேளை அந்த கிரகம் பூமியின் ஈர்ப்பு சக்தி பகுதிக்குள் வந்து விட்டால், பூமியின் சீதோஷ்ண நிலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் எரிந்து சாம்பலாகி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இனி இந்த குட்டி கிரகம், 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.
please comment!!!
உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  

உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.

இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.

அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. please comment!!!
திருநெல்வேலி : கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து விரைவில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று எம்.பி ராமசுப்பு தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள அதிமுக அரசுக்கு காங்., கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கூடன்குளம் அணு மின் நிலையத்தில் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பதத்தி நிலையம் விரைவில் துவங்கப்படுகிறது. கூடன்குளத்தில் பாதுகாப்பான மின் உற்பத்தி நிலையங்கள் அமைவது தொடர்பாக தலைவர் ஜெயின், திட்ட இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு வசதிகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இங்கு மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது 60 சதவீதம் மின்சார சப்ளை ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரமும் மின்சப்ளை இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விரைவில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடன்குளத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். நெல்லை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகும். நான்குநேரி தொழில் நுட்ப பூங்கா, கங்கைகொண்டானில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை ராதாபுரம் கால்வாய்க்கு திருப்பி விட வேண்டும். தற்போது இக்கால்வாயில் 9 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இதுசம்பந்தமாக குமரி மாவட்ட கலெக்டரிடம், நெல்லை மாவட்ட கலெக்டர் வலியுறுத்த வேண்டும். மாவட்டத்தில் பரவலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உவரி பகுதியில் கடல் அரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் 48 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கவும், 1.75 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதி மக்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து 100 கோடி ரூபாய் செலவில் நேரடியாக குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 1 கோடி செலவில் ஆய்வு பணிகளும் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தை தற்போதைய தமிழக அரசு உடனடியாக நிறைவேறற்ற வேண்டும். குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பால பணிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். நெல்லை - திருச்செந்தூர் ரயிலை தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். மதுரை - கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தை மின்சார மயமாக்க வேண்டும். இரட்டை வழி பாதை அமைத்தால் மேலும் கூடுதல் ரயில்களை இயக்க வசதி ஏற்படும். பாளை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே ரிசர்வேஷன் அலுவலக நேரத்தை நீட்டிக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். வாகைகுளம் விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொகுதிக்கு உட்பட்ட பஞ்., பகுதிகளில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம். நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்படும். நெல்லை மாவட்ட கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்கள் அளிக்கப்படும். இவ்வாறு எம்.பி கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் அமீர்கான், சுத்தமல்லி முருகேசன், ஜெயம், சங்கரபாண்டியன், ரமேஷ் உட்பட பலரும் உடனிருந்தனர்.

யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருநெல்வேலி : யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், போர் விதவையர், விதவையர்களின் மகன்கள் மற்றும் படை வீரர்களின் சகோதரர்கள் ஆகியோருக்கு யூனிட் கோட்டா மூலம் ராணுவ ஆட்சேர்ப்பு வரும் 13ம் தேதி முதல் ஏ.எம்.சி சென்டரில் நடக்கிறது. இதில் சோல்ஜர் ஜி.டி பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி 45 சதவீத மார்க், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 32 மார்க் பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.சி பாட திட்டத்தில் படித்திருந்தால் 45 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். வயது 17 அரை வயது முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். சோல்ஜர் டிரேஸ்ட்மேன் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஹவுஸ் கீப்பர் மற்றும் மெஸ் கீப்பர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 17 அரை வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் உயரம் 166 செ.மீ, மார்பளவு 77 செ.மீ, 50 கிலோ எடை இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று உதவி இயக்குனர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
please comment!!!
புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் பாவம் புரிந்து விட்டார் இதனை வரலாறு மன்னிக்காது என யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்., போலீசார் அத்துமீறி நடந்துள்ளது. இது குறித்த கண்காணிப்பு காமிரா விஷயங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பிரதமர் போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டமானது என்று கூறியதன் மூலம் பாவம் செய்து விட்டதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். பிரதமர் நடந்து கொண்ட விதம் நான் மன்னித்து விடுகிறேன் ஆனால் வரலாறு மன்னிக்காது என்றார். ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என்றார்.
உயர் கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன்...



கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கல்வி கடன்களை பெறலாம்.

மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம்.

நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.

உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.
கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும்.

please comment!!!
கோடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி

First Published : 06 Jun 2011 09:04:46 AM IST


ராஜஸ்தான் மாநிலம் கோடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 2 பேராசிரியர் பணியிடங்களும், 10 துணைப் பேராசிரியர் பணியிடங்களும், 11 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கின்றன.
 விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250.Registrar, University of Kota  என்கிற பெயருக்கு வங்கி வரைவோலை மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த
 வேண்டும்.
 விண்ணப்பிக்கும் முறை: உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 02.07.2011-ம் தேதிக்கு முன்னர் பல்கலைக் கழகத்துக்கு சென்றடைய வேண்டும். முகவரி:  Registrar, University
 of Kota, M.B.S. Marg, Near Kabir Circle, Kota, Rajasthan.
மேலும்  விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்துக்கு www.uok.ac.in என்கிற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


please comment!!!

உங்களின் கருத்துக்கள் :.............................................................



சமச்சீர் கல்வி: முதல்வர் விளக்கம்

சென்னை, ஜூன்.7: 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை (திருத்தச்) சட்டமுன்வடிவு மீதான விவாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.பேரவையில் அவர் ஆற்றிய உரை:





இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தும்போதே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இதை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.  இது சம்பந்தமாக அவருடைய கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஏற்கெனவே இந்த அவையில் என்ன பேசியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிவிப்பது பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.  சமச்சீர் கல்வித் திட்டம் மிக அவசரமாகச் செயல்படுத்தக்கூடியது அல்ல.  அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவேண்டுமெனில் டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.  இதைத்தான் இந்த சட்டம் இந்த மன்றத்திலே அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து கட்சிகளும் எடுத்துக் கூறியுள்ளன.  பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. மணி அவர்கள் தெரிவித்த கருத்தை நான் இங்கே நினைவுபடுத்த விழைகிறேன்.


தமிழக அரசின் சார்பிலே சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.  ஆனால் இப்போது கொண்டு வந்திருக்கிற இந்தச் சட்டமுன்வடிவிலே மிகப்பெரிய திருத்தங்கள் எல்லாம் செய்யப்படவேண்டும்.  இப்போது நீங்கள் கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது.  பிரிவு வாரியாக என்று சொன்னால் நிறைய சொல்லலாம்.  இருந்தாலும்கூட டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீங்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும்.  இப்போதே நிறைவேற்றாமல் கல்வி வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்து, கருத்துக் கேட்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.  இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட கருத்து.  இதில் அவர்கள் நிற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெரிவித்தால் நல்லது.

இதற்கு முன்பு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுகின்றபோது, ஏற்கெனவே  அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை என்று குறிப்பிட்டார்.  ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அல்ல.  1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு மட்டும்தான்.  ஆகவே, முழுமையாக மறுபரிசீலனை செய்து முழுமையான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்களுடைய எண்ணம்.

இவ்வாறு ஜெயலலிதா உரையாற்றினார்.

please comment!!!



FILE
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, அப்போது ஏர்செல் நிறுவனத்தின் தலைவராக இருந்த சி.சிவசங்கரனிடம் மத்திய புலனாய்வுக் கழகம் வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்துள்ளது.

டெல்லியில் குறிப்பிடப்படாத ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சிவசங்கரனிடம், ஏர்செல் தலைவராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அப்போது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடன் நடந்த கடிதத் தொடர்பு குறித்து வினாக்களை எழுப்பினர். அதற்கு சிவசங்கரன் அளித்த பதிலை பதிவு செய்தனர்.

FILE
இந்த விசாரணையின்போது, தனது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அது வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற தனது நிறுவனம் அனுப்பிய விண்ணப்பங்களை தயாநிதி மாறன் நிராகரித்ததாகவும் கூறியுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி கூறுகிறது.

பில்லியன் டாலர் மதிப்புடைய சிவா குழுமத்தின் தலைவரான சி்வசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். 2006ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்தார்.

ஆனால் அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பிறகு அமைச்சர் தயாநிதி மாறன் கொடுத்த அழுத்ததிற்கு உட்பட்டு மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு 74 விழுக்காடு பங்குகளை விற்றார். அத்தோடு ஏர்செல் நிறுவனம் கைமாறியது. அதன் பிறகு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏர்செல் நிறுவனம் பெற்றது.

இதற்குக் கைமாறாக, தயாநிதி மாறனின் சகோதரரான கலாநிதி மாறன் நடத்தும் சன் டைரக்ட் எனும் நேரடி தொலைக்காட்சி வசதி தரும் நிறுவனத்தில் மாக்சிஸ் நிறுவனம் 599 கோடி முதலீடு செய்தது. 

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை புலனாய்வு செய்துவரும் ம.பு.க. இப்போது அந்த ஊழல் எங்கேயிருந்து தொடங்கியது என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேட்டை விசாரித்து வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கேற்ற பல்வேறு படிப்புகள் நேரடியாகவும், பகுதி நேரமாகவும், தொலைநெறிக்கல்வி வழியிலும் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பை முடிக்கும் அளவுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் உருவாக்கப்பட்டு  நடத்தப்படுகின்றன. இதில் எம்ஏ ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடனும், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் உள்ளன. 

இதுதவிர இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ், ஹெர்பல் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன. இப்படிப்புகளில் சேர அடிப்படை கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.annamalai university.ac.in என்ற இணையதளத்திலோ, 04144&238248/263/796 ஆகிய தொலைபேசி எண்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

இந்திய பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித் தொகை அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவித் தொகை வழங்குகிறது. பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகே இந்த உதவித் தொகை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கல்விக் கட்டணம், புத்தகம், இதர செலவுகளுக்காக தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை அளிக்கப்படும்.
உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. மேலும், கணினி தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்கம் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான செலவையும் மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளும்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆய்வுப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்திய பல்கலையில் பிஎச்.டி. பயில பதிவு செய்திருப்பவர்கள் முதல் மூன்றாம் ஆண்டில் இருக்கும் மாணவர்கள் வரை இதற்கு தகுதியானவர்கள்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. பயில வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 11.00 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு : http://research.microsoft.com