Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்பிஏ அட்மிஷன்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் ஒப்புதலுடன் எம்பிஏ, எம்இ, எம்சிஏ உள்ளிட்ட முதுகலை தொழிற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு 2011-12ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை பல்கலை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் மே1ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. MCA (Computer Science), ME (Computer Science and Engineering), MBA (with Specialization in Finance, Marketing & Human Resource) ஆகிய படிப்புகளை மேற்கொள்ளலாம். இப்படிப்புகளில்  சேர விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான பொது நுழைவுத்தேர்வு (டான்செட்-2011) எழுதியிருக்க வேண்டும். 2011 ஏப்ரல், மே மாதத் தில் பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எம்பிஏ படிப்புக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண், குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்சிஏ படிப்புக்கு டான்செட்/கேட்-2011 நுழைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். எம்இ படிப்புக்கு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், ஏஐசிடிஇ முதுநிலை உதவித்தொகை பெற தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பத்தை ரூ.300ஐ டிடியாக செலுத்தி நேரிலோ, ரூ.320 செலுத்தி தபாலிலோ பெறலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பல்கலைக்கழக பதிவாளரிடம் சாதிசான்றிதழ் நகலை விண்ணப்ப மனுவுடன் இணைத்து இலவசமாக பெறலாம். ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணவிடை, தபால்விடை, காசோலை மற்றும் பணம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். இத்துடன் 'பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் நெல்லையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.300க்கு டிடி எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் டான்செட்&2011 நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டின் நகலையும் இணைக்க வேண்டும். டான்செட், கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31க்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply