Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு


ஆராய்ச்சிகள் என்ற பெயரில், விலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு இயக்கத்தை புளுகிராஸ் இயக்கம் நடத்தி வருகிறது.கம்ப்யூட்டர், சாப்ட்வேர் தொழில்நுட்பம் வந்த பிறகு, ஆய்வகங்களில் விலங்குகள் அவஸ்தைப் படும் சூழல் குறைந்துள்ளது. கால்நடைகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளில், பொதுவாக கால்நடைகளின் வயிற்றில் துளை போட்டே ஆராய்ச்சியாளர் ஆய்வுகளை நடத்துவார். ஆராய்ச்சியின் போது கால்நடைகள் சுயநினைவில் தான் இருக்கும். எனவே அதன் அவஸ்தையுடன் தான் ஆராய்ச்சிகள் தொடரும்.இந்தக் குறையைப் போக்க "ரூசிடெக்' என்ற தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கால் நடைகளுக்கு பதில், இதில் ஆய்வு நடத்தலாம். "ரூசிடெக்' என்பது கால்நடைகளின் மாதிரி என்றும் கூறலாம். கால்நடைகள் வெளியிடும் மீத்தேனின் அளவையும், இந்தக் கருவியின் மூலமாக அறியலாம். தமிழக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இதனை வடிவமைத்துள்ளது.
தகவல் சுரங்கம்


டார்ஜிலிங் ரயில்

இந்தியாவில் மலைப்பாதை ரயிலான டார்ஜிலிங் ரயில், யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங் களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.இந்தியாவில் மலைப்பாதை ரயில்களாக ஊட்டி ரயில், கல்கா முதல் சிம்லா வரை உள்ள ரயில், நியூ ஜல்பகுரி முதல் டார்ஜிலிங் வரை உள்ள ரயில் ஆகியன உள்ளன. இந்த டார்ஜிலிங் ரயில் பாதையின் மொத்த தூரம் 88 கி.மீ., ஆகும். மலைப்பாதை என்பதால் மணிக்கு 12 கி.மீ., என்ற ரீதியில் இதன் வேகம் உள்ளது. இந்த ரயிலின் பயண நேரம் 7 மணி நேரம் 15 நிமிடங்களாகும்.சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, டார்ஜிலிங் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவும் இந்த ரயிலே பயன்படுகிறது. எனவே இந்த ரயில் நாள்தோறும் இயக்கப் படுகிறது. காலை 9 மணிக்கு நியூ ஜல்பகுரியில் புறப்படும் இந்த ரயில், அழகிய மலைப்பாதைகள் வழியாக மெல்ல மெல்ல ஊர்ந்து, மாலை 4 மணிக்கு டார்ஜிலிங்கை அடைகிறது. வழியில் 4 இடங்களில் மட்டுமே நிற்கிறது.

please comment!!!