Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

அறிவியல்   >>   சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்பு

சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்பு

diggShare21
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


நாசா: சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள்.

சனி கிரகத்தின் தன்மை பற்றியும் அதன் துணைக் கோள்கள் (சந்திரன்) பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 1997ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனி ஏரியாவை இது 2004ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005ல் தரையிறங்கியது. காசினியும் ஹைகன்சும் தங்கள் ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால் அவற்றின் ‘பதவிக்காலம்’ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சிக்கு ‘காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்’ என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரு விண்கலமும் 2017 வரை மக்கர் பண்ணாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில், டைட்டனை சுற்றி வெண் மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது.

இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன. அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும் இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply