Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு
நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

கதையின் வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து
எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.
விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார்.
அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக
கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது.
இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
இந்தக் காலக்கட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.

வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்

  • வந்தியத் தேவன்
  • குந்தவை
  • அருள்மொழிவர்மன்
  • சுந்தர சோழர்

ஏனைய சில பாத்திரங்கள்

  • நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியனை காதலிக்கிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றபின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளவரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள். இறுதியில் சுந்தர சோழருக்கும் மந்தாகினிக்கும் பிறந்தவள் என்றும், ஆதித்த கரிகாலனின் தங்கை என்றும் உண்மை அறிந்து மறைகிறாள்.
  • ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.
  • அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.
  • வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார்.
  • பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது.
  • சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார்.
  • செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு

இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.

இந்த பொன்னியின் செல்வன் கதையை மின்னூலாக (PDF) பதிவிறக்கம் செய்து படித்து மகிழ கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

 

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.

கதைச் சுருக்கம்

ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.

உண்மைச் சரித்திரப் பாத்திரங்கள்


இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பின்வரும் பாத்திரங்கள் உண்மையாகவே வரலாற்றில் வாழ்ந்தோராகும்.
  • முதலாம் நரசிம்ம பல்லவன்
  • சிறுத்தொண்டர் - நரசிம்மரின் சேனாதிபதி
  • இரண்டாம் புலிகேசி - சாளுக்கிய மன்னன்
  • சுவான்சாங் - சீன பயணி
  • நரசிம்மரின் நரபலியைத் தடுக்கும் முன்னெடுப்புகள்
இந்த பார்த்திபன் கனவு கதையை மின்னூலாக (PDF) பதிவிறக்கம் செய்து படித்து மகிழ கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

 
தொகுப்பு : 
http://ta.wikipedia.org/wiki/
பின் குறிப்பு : கருத்துக்களை விட்டு செல்லவும்.
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
please comment!!!
 சென்னை: சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்., 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவ., 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை - 115, வேலூர்-112, விழுப்புரம் - 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
please comment!!!
தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: அடுத்த வாரம் கமிட்டி அறிக்கை 

மேல் முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதற்கான அறிக்கையை அடுத்த வாரம் நீதிபதி ரவிராஜ பாண்டியன் அரசிடம் வழங்குகிறார்.  தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது.
 
இந்த கமிட்டி 10,400 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தது. நீதிபதி கோவிந்த ராஜன் நிர்ணயித்த கட்டணம் போதாது. அதைக்கொண்டு பள்ளியை நடத்த இயலாது. அதனால் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில் 6,400 பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல் முறையீடும் செய்தன.
 
இதைத் தொடர்ந்து கட்டிடம், ஆய்வகம் வசதி, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அந்த பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஐகோர்ட்டு காலக்கெடு விதித்தது. இதற்கிடையில் நீதிபதி கோவிந்தராஜன் உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேல் முறையீடு செய்த பள்ளி முதல்வர், நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
 
கூடுதலான ஆவணங்களை பெற்று அவர் ஆய்வு செய்தார்.   கடந்த 6 மாதமாக தனியார் பள்ளிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை 6000 பள்ளிகளிடம் ஆய்வு முடித்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 400 பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
 
இதையடுத்து புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி முடிவு செய்துள்ளது.   மே மாதம் இறுதியில் புதிய கல்வி கட்டணம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சட்டசபை தேர்தல் முடிவு மே 13-ந்தேதி வெளியிடப்படுவதால் அதன் பிறகு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுக்கு முன்போ அல்லது பின்னரோ புதிய கல்வி கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும்.
பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலைக் பாடத்த்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிர பரவல் பாலியற்கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆண் விடலை அறிந்திருக்க வேண்டியவை

  • தானாகவே வரும் விறப்புத்தன்மை
  • விந்து 

இளம் பெண் அறிந்துருக்க வேண்டியவை

  • மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்
மார்பக வளர்ச்சி
  • கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்கள் அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களால்வழியாக அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்கள் அளிக்கும் பட்டங்கள் முக்கியமாக ஐந்து நிலையில் உள்ளது.
  1. இளம்நிலைப் பட்டம்
  2. முதுநிலைப் பட்டம்
  3. ஆய்வியல் நிறைஞர் பட்டம்
  4. முனைவர் பட்டம்
  5. மதிப்புறு முனைவர் பட்டம்

இளம்நிலைப் பட்டம்

பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் கல்லூரிக்குச் சென்று முதலில் படித்துத் தேர்ச்சி அடையும் படிப்புகளுக்கு இளம்நிலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. இவை அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.
  • கலைப் பாடங்கள் - இளங்கலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - இளம் அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - இளம்நிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - இளம்நிலை பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - இளம்நிலை கால்நடை அறிவியல் பட்டம்
  • விவசாயம் - இளம்நிலை விவசாயம் பட்டம்
  • மீன் வளம் - இளம்நிலை மீன் வளர்ப்பு அறிவியல் பட்டம்
  • விளையாட்டு - இளம்நிலை உடற்பயிற்சிக் கல்வி பட்டம்
- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இளம்நிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம்

கல்லூரிப்படிப்பில் இளம்நிலைப் பட்டம் முடித்து மேற்படிப்பு படிப்பவர்கள் அந்நிலையில் தேர்ச்சி அடையும் போது முதுநிலை பட்டம் அளிக்கப்படுகிறது. இவையும் அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்தே வழங்கப்பட்டு வருகிறது.
  • கலைப் பாடங்கள் - முதுகலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - முதுநிலை அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - முதுநிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - முதுநிலைப் பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - முதுநிலை கால்நடை அறிவியல்
  • விவசாயம் - முதுநிலை விவசாயம்
  • மீன் வளம் - முதுநிலை மீன் வளர்ப்பு அறிவியல்
  • விளையாட்டு - முதுநிலை உடற்பயிற்சிக் கல்வி
- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக முதுநிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆய்வியல் நிறைஞர் பட்டம்

ஒவ்வொரு துறையிலும் முதல்நிலை ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்து அதில் தேர்ச்சி அடையும் போது ஆய்வியல் நிறைஞர் பட்டம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டம் இளம் முனைவர் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறது.

முனைவர் பட்டம்

ஒவ்வொரு துறையிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல்நிலைப் படிப்பாக முனைவர் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி அடையும் நிலையில் அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது. இப்படிப்புகளுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறாமல் முதுகலைப் பட்டம் பெற்று நேரடியாகச் சேரும் வாய்ப்பும் உள்ளது.

மதிப்புறு முனைவர்

ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர் மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் வானியல், வானியற்பியலில் செயலார்ந்த குழுக்களை உருவாக்கவும் வளர்க்கவும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமே பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA - ஐயூக்கா ); இது பூனாவிலுள்ளது. பல்கலைக்கழகங்களிடையில் வானியல்-வானியற்பியல் கற்பித்தல், ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய துறைகளில் தலைசிறந்த மையமாக இருப்பதே ஐயூக்காவின் நோக்கமாகும்.