பட்டம் (கல்வி)
Posted by: MSB Posted date: 15:53 / comment : 0
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்கள் அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களால்வழியாக அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்கள் அளிக்கும் பட்டங்கள் முக்கியமாக ஐந்து நிலையில் உள்ளது.
- இளம்நிலைப் பட்டம்
- முதுநிலைப் பட்டம்
- ஆய்வியல் நிறைஞர் பட்டம்
- முனைவர் பட்டம்
- மதிப்புறு முனைவர் பட்டம்
இளம்நிலைப் பட்டம்
பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் கல்லூரிக்குச் சென்று முதலில் படித்துத் தேர்ச்சி அடையும் படிப்புகளுக்கு இளம்நிலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. இவை அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.- கலைப் பாடங்கள் - இளங்கலைப் பட்டம்
- அறிவியல் பாடங்கள் - இளம் அறிவியல் பட்டம்
- மருத்துவம் - இளம்நிலை மருத்துவம் பட்டம்
- பொறியியல் - இளம்நிலை பொறியியல் பட்டம்
- கால்நடை பராமரிப்பு - இளம்நிலை கால்நடை அறிவியல் பட்டம்
- விவசாயம் - இளம்நிலை விவசாயம் பட்டம்
- மீன் வளம் - இளம்நிலை மீன் வளர்ப்பு அறிவியல் பட்டம்
- விளையாட்டு - இளம்நிலை உடற்பயிற்சிக் கல்வி பட்டம்
முதுநிலைப் பட்டம்
கல்லூரிப்படிப்பில் இளம்நிலைப் பட்டம் முடித்து மேற்படிப்பு படிப்பவர்கள் அந்நிலையில் தேர்ச்சி அடையும் போது முதுநிலை பட்டம் அளிக்கப்படுகிறது. இவையும் அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்தே வழங்கப்பட்டு வருகிறது.- கலைப் பாடங்கள் - முதுகலைப் பட்டம்
- அறிவியல் பாடங்கள் - முதுநிலை அறிவியல் பட்டம்
- மருத்துவம் - முதுநிலை மருத்துவம் பட்டம்
- பொறியியல் - முதுநிலைப் பொறியியல் பட்டம்
- கால்நடை பராமரிப்பு - முதுநிலை கால்நடை அறிவியல்
- விவசாயம் - முதுநிலை விவசாயம்
- மீன் வளம் - முதுநிலை மீன் வளர்ப்பு அறிவியல்
- விளையாட்டு - முதுநிலை உடற்பயிற்சிக் கல்வி
ஆய்வியல் நிறைஞர் பட்டம்
ஒவ்வொரு துறையிலும் முதல்நிலை ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்து அதில் தேர்ச்சி அடையும் போது ஆய்வியல் நிறைஞர் பட்டம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டம் இளம் முனைவர் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறது.முனைவர் பட்டம்
ஒவ்வொரு துறையிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல்நிலைப் படிப்பாக முனைவர் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி அடையும் நிலையில் அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது. இப்படிப்புகளுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறாமல் முதுகலைப் பட்டம் பெற்று நேரடியாகச் சேரும் வாய்ப்பும் உள்ளது.மதிப்புறு முனைவர்
ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர் மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது.About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: