புவியியல் ஆள்கூற்று முறை
Posted by: MSB Posted date: 09:07 / comment : 0
புவியியல் ஆள்கூற்று முறை
புவியியல் ஆள்கூற்று முறை (Geographic coordinate system) என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயண்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளரான தொலமி பபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதிகளாக பிரித்தார்.(பாகை)
- அகலாங்கு என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் சிறு வட்டங்களை அமைக்கின்றன. மத்திய கோடு 0 பாகை அகலாங்காகும் இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்காகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
- நெட்டாங்கு என்பது ஒரு புள்ளி ஒரு ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் சந்திகின்றது.
உதாரணமாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும்.
பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.
- DM பாகை:கலை (49:30.0-123:30.0)
- DMS பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)
- DD தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.
புவிநிலை ஆள்கூறுகள்
புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) மத்தியக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அது எப்போது பூச்சியமாகும்.மூன்றாவது பரிமாணம்: உயரம்,ஆளம்
புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஒரு ஆதார தளத்துக்கு சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆளமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தூரம் பயன்படுத்தப்படுகிறது.About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: