கல்கியின் பார்த்திபன் கனவு மின்னூல் தமிழில்
Posted by: MSB Posted date: 18:51 / comment : 0
பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி
இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர்
நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின்
கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக்
கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
கதைச் சுருக்கம்
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான
நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு
குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ
அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன்,
பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு
பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது.
கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன்,
பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி
நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி
செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப்
பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான
செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான
பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய
சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம்
புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில்
வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
உண்மைச் சரித்திரப் பாத்திரங்கள்
இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள
பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
பின்வரும் பாத்திரங்கள் உண்மையாகவே வரலாற்றில் வாழ்ந்தோராகும்.
- முதலாம் நரசிம்ம பல்லவன்
- சிறுத்தொண்டர் - நரசிம்மரின் சேனாதிபதி
- இரண்டாம் புலிகேசி - சாளுக்கிய மன்னன்
- சுவான்சாங் - சீன பயணி
- நரசிம்மரின் நரபலியைத் தடுக்கும் முன்னெடுப்புகள்
தொகுப்பு :
http://ta.wikipedia.org/wiki/
பின் குறிப்பு : கருத்துக்களை விட்டு செல்லவும்.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
இந்தியா மாநிலங்கள்-28 தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண் (இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில்...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: