வரலாறு
Labels
- அரசியல்
- அறிவியல்
- ஆராய்ச்சி
- ஆரோக்கியம்
- இயற்கை
- இலவச மடிக்கணினி
- இலவச மென்பொருட்கள்
- உடல் நலம்
- உயிரித் தொழில்நுட்பம்
- உயிரியல்
- உளவியல்
- கணிதம்
- கணினி தகவல்கள்
- கதைகள்
- கல்வி
- கல்வி தகவல்கள்
- காலநிலை
- குரூப்-2 தேர்வு
- சட்டம்
- சமுதாயம்
- சூரியக் குடும்பம்
- செய்திகள்
- டி.என்.பி.எஸ்.சி
- தகவல்கள்
- திருமணம்
- தேர்தல் முடிவுகள்
- தொழில்நுட்பம்
- புகையிலை
- புவியியல்
- புள்ளியியல்
- பொது அறிவு
- பொதுத் தேர்வு
- மக்கள் தொகை
- மருத்துவம்
- மின்னூல்
- மொபைல்
- வரலாறு
- விண்வெளி ஆராய்ச்சி
- விருது
- வேலைவாய்ப்பு
- ஜோதிடம்
மொகெஞ்சதாரோ
| மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்* | |
|---|---|
| யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | ii, iii |
| மேற்கோள் | 138 |
| பகுதி† | ஆசியா-பசிபிக் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1980 (4வது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. | |
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
வரலாறு
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.லோத்தல்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India) கருத்துப்படியான பண்டைக்கால லோத்தலின் தோற்றம்.
மெஹெர்கர்
மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.
அரப்பா
அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.முகலாயக் கட்டிடக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகலாயக் கட்டிடக்கலை என்பது 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர், இன்றைய இந்தியா, பாகிசுத்தான், வங்காளதேசம் என்பவற்றை உள்ளடக்கி இருந்த அன்றைய இந்தியாவை ஆண்ட காலத்தில் தோன்றி வளர்ந்த ஒரு தனித்துவமான கட்டிடக்கலைப் பாணி ஆகும். இது, இசுலாமிய, பாரசீக மற்றும் இந்தியக் கட்டிடக்கலைகளின் கலப்பினால் உருவானது.வரலாற்றுப் பின்னணி
[தொகு] அக்பர் காலம்
பேரரசர் அக்பர் (1556-1605) காலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவரது ஆட்சிக் காலப் பகுதியில் முகலாயக் கட்டிடக்கலைப் பாணி பெருமளவு வளர்ச்சி பெற்றது. குசராத்திலும் பிற இடங்களிலும் காணப்படுவது போல இவரது காலக் கட்டிடங்களில் முசுலிம், இந்து ஆகிய கட்டிடக்கலைகள் சார்ந்த கூறுகள் காணப்படுகின்றன. 1500 களின் இறுதிப் பகுதியில், அக்பர், ஃபத்தேப்பூர் சிக்ரி என்னும் அரச நகரைக் கட்டினார். இது ஆக்ராவில் இருந்து 26 மைல்கள் (42 கிமீ) தொலைவில் உள்ளது. பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள பல கட்டிடங்கள் இவர் காலக் கட்டிடக்கலையின் பாணியைத் தெளிவாகக் காட்டுகின்றன. அங்குள்ள பெரிய மசூதி சீரிய தோற்றமும், கட்டிடக்கலைத் தாக்கமும் கொண்டது. இந் நகரின் தெற்கு நுழைவாயில் மிகவும் பெயர் பெற்றது. அளவிலும், அமைப்பிலும் இந் நுழைவாயில் இந்தியாவில் உள்ள இது போன்ற வேறெந்த அமைப்புக்கும் ஈடாகக் கூடியது. முகலாயர்கள் பல கவர்ச்சியான சமாதிக் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். அக்பரின் தந்தையான உமாயூனின் சமாதியும், சிக்கந்திராவில் உள்ள அக்பரின் சமாதியும் இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.சகாங்கீர்
பேரரசர் சகாங்கீர் (1605–1627) காலத்தில் முகலாயர் கட்டிடங்களில் இருந்து இந்துக் கூறுகள் முற்றாகவே மறைந்து விட்டன. லாகூரில் உள்ள இவர்காலத்துப் பெரிய மசூதி பாரசீகக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவியது. ஆக்ராவில் உள்ள 1628 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இத்திமாத் உத் தௌலாவின் சமாதி முழுவதுமாக வெள்ளைச் சலவைக்கல்லால் ஆனது. இதன் மேற்பரப்பு முழுவதும் கல்லிழைப்பு (pietra dura)வேலைப்பாடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது இத்தகைய வேலப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது. காசுமீரின் தால் ஏரிக் கரையில் அமைந்துள்ள சாலிமார் பூங்காவும் அதனோடிணைந்த மண்டபங்களும் சகாங்கீரினால் கட்டப்பட்டவையே. இவர் தனது வளர்ப்பு விலங்கான மானொன்றுக்கும், பாகிசுத்தானில் உள்ள சேக்குபுரா என்னுமிடத்தில் இரான் மினார் என்னும் சமாதி ஒன்றைக் கட்டினார். இவர் இறந்த பின்னர் இவர்மீது கொண்ட அன்பின் காரணமாக இவரது மனைவி இவருக்கா ஒரு சமாதிக் கட்டிடத்தை லாகூரில் எழுப்பினார்.சாசகான்
பேரரசர் சா சகான் காலத்தில், முகலாயக் கட்டிடக்கலை நுணுக்கமான நளினத் தோற்றம், வேலைப்பாடுகளில் மெருகு என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது, அவர் காலத்தில் ஆக்ரா, தில்லி ஆகிய நகரங்களில் கட்டப்பட்ட பெரிய அரண்மனைகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட சமாதிக் கட்டிடங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்ததும், உலகப் புகழ் பெற்றதுமான கட்டிடம் சா சகான் தனது மனைவியான மும்தாசுக்காக ஆக்ராவில் கட்டிய தாஜ் மகால் ஆகும். ஆக்ராக் கோட்டையில் உள்ள மோத்தி மசூதி, தில்லியில் உள்ள ஜமா மசூதி என்பன சா சகான் காலத்துக் கட்டிடக்கலையின் வடிவமைப்பு நுட்பங்களைத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றன. சா சகான், லாகூர்க் கோட்டையுள் அமைந்துள்ள சமாதிக் கட்டிடம், மோத்தி மசூதி, சீசு மகால், நௌலாகா மண்டபம் போன்ற கட்டிடங்களையும் கட்டினார். இவர் தத்தா என்னும் இடத்தில் அவரது பெயரில் அமைந்த சா சகான் மசூதி என்னும் ஒரு மசூதியையும் அமைத்துள்ளார். சேக் இல்ம் உத் தீன் அன்சாரி என்னும் அரண்மனை மருத்துவரால் கட்டப்பட்ட லாகூரில் உள்ள வாசிர் கான் மசூதியும் சா சகான் காலத்தைச் சேர்ந்ததே.ஔரங்கசீப் காலமும் பிற்கால முகலாயக் கட்டிடக்கலையும்
ஔரங்கசீப்பின் (1658–1707) காலத்தில், கட்டிடங்களில் செவ்வகக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்களினதும், சலவைக் கற்களினதும் பயன்பாடு குறைந்து, செங்கற்களும், கண்ட கற்களும் பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றின்மேல் சாந்தினால் அழகூட்டல்கள் செய்யப்பட்டன. முன்னரே கட்டப்பட்ட லாகூர்க் கோட்டையில் சில கட்டிட வேலைகளை இவர் செய்துள்ளார். அங்குள்ள 13 நுழைவாயில்களுள் ஒன்று ஔரங்கசீப்பினால் கட்டப்பட்டதே. இது பின்னர் இவரது பெயரில் "அலாம்கீர்" என வழங்கப்பட்டது. இவர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் கவர்ச்சியான கட்டிடம், லாகூரில் 1674 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாத்சாகி மசூதி ஆகும். லாகூர்க் கோட்டைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இது, தொடராகச் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டு வந்த பல பெரிய மசூதிகளில் கடைசியானதாகும். இது சா சகானால் சாசகானாபாத்தில் கட்டப்பட்ட மசூதியின் வடிவமைப்பிற்கு நெருக்கமாக ஒத்துள்ளது.ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது.
கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.
பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 - 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 - 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.
மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 - 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.
மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.
கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.
கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.
- வரலாற்றுக்கு முந்திய கலை
பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 - 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 - 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.
மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 - 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.
கிழக்கத்திய ஓவியங்கள்
தென்னாசிய ஓவியங்கள்
- மான்கோட் மகாராஜா சீதல் தேவ் வழிபாட்டில் இருப்பதைக் காட்டும் பாசோலி ஓவியம், c. 1690.
- பீஜப்பூரின் இப்ராஹிம் ஆதில் ஷாவின் உருவப்படம் (1580-1626); 1615.
- கோவர்தன் சாந்த்தின் உருவப்படம், பஞ்சாப் பாணி, c. 1750.
- அக்பரும் தான்சனும் பிருந்தாவனில் ஹரிதாசைக் காணுதல், இராஜஸ்தான் பாணி, c. 1750.
- பிள்ளைகளுடன் ஒரு மனிதன், பஞ்சாப் பாணி, 1760.
- ராதை கண்ணனைப் பிடித்தல், பஞ்சாப் பாணி, 1770.
- காட்டில் இராமனும் சீதையும், பஞ்சாப் பாணி, 1780.
இந்திய ஓவியங்கள்
இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. இந்திய ஓவியம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.
- மதுபானி ஓவியப் பாணி
- ராஜபுதன ஓவியப் பாணி
- முகலாய ஓவியப் பாணி
- தஞ்சாவூர் ஓவியப் பாணி
- சென்னை ஓவியப் பாணி
- வங்காள ஓவியப் பாணி
கிழக்காசிய ஓவியங்கள்
- லுவோஷென்பூ, கு கைஸி வரைந்தது. (344-406 AD), சீனம்.
- Eighty-Seven Celestials, by Wu Daozi (685-758), Chinese
- Portrait of Night-Shining White, by Han Gan, 8th century, Chinese
- Spring Outing of the Tang Court, by Zhang Xuan, 8th century, Chinese
- Paradise of the Buddha Amitabha, 8th century, Chinese
- Ladies making silk, a remake of an 8th century original by Zhang Xuan by Emperor Huizong of Song, early 12th century, Chinese
- An illustrated sutra from the Nara period, 8th century, Japanese
- Ladies Playing Double Sixes, by Zhou Fang (730-800 AD), Chinese
- The Xiao and Xiang Rivers, by Dong Yuan (c. 934-962 AD), Chinese
- Golden Pheasant and Cotton Rose, by Emperor Huizong of Song (r.1100-1126 AD), Chinese
- Listening to the Guqin, by Emperor Huizong of Song (1100-1126 AD), Chinese
- Chinese, anonymous artist of the 12th century Song Dynasty
-
- Ma Lin, 1246 AD, Chinese
- A Man and His Horse in the Wind, by Zhao Mengfu (1254-1322 AD), Chinese
- Shukei-sansui (Autumn Landscape), Sesshu Toyo, (1420-1506), Japanese
-
-
- Pine Trees, six sided screen, by Hasegawa Tohaku (1539-1610), Japanese
-
- Scroll calligraphy of Bodhidharma, “Zen points directly to the human heart, see into your nature and become Buddha”, Hakuin Ekaku (1686 to 1769), Japanese
- Hanging scroll 1672, Kanō Tanyū, (1602-1674), Japanese
- Peonies, by Yun Shouping (1633-1690), Chinese
- Genji Monogatari, by Tosa Mitsuoki (1617–1691), Japanese
- View of Geumgang, Jeong Seon (1676–1759), 1734, Korean
- Ike no Taiga, (1723-1776), Fish in Spring, Japanese
-
- A Cat and a Butterly, Kim Hong-do (1745-?), 18th century, Korean
- A Boat Ride, Shin Yun-bok (1758-?), 1805, Korean
-
- A tanuki (raccoon dog) as a tea kettle, by Katsushika Hokusai (1760—1849), Japanese
- Katsushika Hokusai, The Dragon of Smoke Escaping from Mt Fuji, Japanese
-
-
கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.
கிங் மிங் விழாவின்போது ஆற்றோரக் காட்சி (Along the River During Qing Ming Festival), சீன ஓவியரான சாங் செடுவான் வரைந்த, 12 ஆம் நூற்றாண்டு ஓவியத்தின் 18ஆம் நூற்றாண்டு மீள்வரைவு.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
உடலமைப்பு, முக அழகி...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ. படிப்புக்கு இணையானதுமான புள்ளியியல் துறை படிப்பு பற்றி தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்ல...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது