Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
please comment!!!
1934ல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில் சர்வ தேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. மொழி, கலை, மொழியியல், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்த கவுன்சில் உதவி வருகிறது.
பிரிட்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நல்லதொரு உறவை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த கவுன்சில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் ஸ்காலர்ஷிப்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவைகள்: இந்தியாவில் குடியிருக்கும் பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு இள நிலை மற்றும் முது நிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தலைமைப் பண்புகளைப் பெற்றவர் என்பதற்கு சான்றாக சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூலமாக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்கான ஆர்வமும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியில் சரளமாகப் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். 31.12.2011 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப்பிற்கு தேர்ந்தெடுத்து அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புது டில்லியில் நடத்தப்படும் நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். இது குரித்த முழுமையான விபரங்களைப் பெற இந்த அமைப்பின் இணையதளம் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
Vishu Sharma,
Scholarships,
British Council,
17, Kasturba Gandhi Marg,
New Delhi 110 001.
INDIA.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2011
இணையதள முகவரி : www.britishcouncil.org/india&scholarships&drmanmohansing.htm#prog
please comment!!!
மதுரை : மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் ஏற்படுத்தித் தர மைக்ரோ இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது.
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது.
இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும்.
மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை அப்டேட் செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும்.
மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும்.
இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-16 என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

please comment!!!
ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும்.பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமலானதன் காரணமாக, 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ளனர். இதனால், தனித்தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த மாணவர்கள், 2012, செப்டம்பரில் நடைபெறும் தேர்வுக்குள், "அரியர்ஸ்' பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது, தேர்வுத்துறை விதிமுறைப்படி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு மற்றும் அதன்பின் செப்டம்பரில் நடைபெறும் தனித்தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத முடியும்.
நாளை துவங்கும் தனித்தேர்வை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் எழுதலாம். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், 2012 செப்டம்பருக்குள், தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில், 2013 மார்ச்சில் நடைபெறும் தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டியிருக்கும்.

தேர்ச்சி அடைந்த பாடங்கள் உட்பட, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும். பல ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, திடீரென புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதுவது, தனித்தேர்வு மாணவர்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கும்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வுத்துறை விதிமுறைப்படி, 2012, செப்டம்பர் தேர்வு வரை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதலாம். அதன்பிறகும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டுமெனில், தமிழக அரசின் அனுமதி தேவை.அதிகமான மாணவர்கள், "அரியர்ஸ்' வைத்திருந்தால், அவர்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி, அரசிடம் தேர்வுத்துறை அனுமதி கேட்கலாம். அரசு அனுமதித்தால், கூடுதலாக ஒரு பருவமோ அல்லது இரு பருவ தேர்வுகளுக்கோ மாணவர்கள் அனுமதிக்கப்படலாம். அரசு அனுமதி மறுத்தால், புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பில்77 ஆயிரம் பேர்:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள், நாளை துவங்குகின்றன. அக்டோபர் 1ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வை, 48 ஆயிரத்து, 696 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, 76 ஆயிரத்து, 828 மாணவர்களும் எழுதுகின்றனர்.

please comment!!!
புதுடில்லி: சமச்சீர் கல்வியை, 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 1 முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்துவதாக, சட்ட சபையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளியிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்த ”ப்ரீம் @கார்ட் "பெஞ்ச்' , இதற்கு, 25 காரணங்களையும், பட்டியலிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், புதிய அரசு பதவியேற்ற பின், மே 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது மே 21ல், பழைய கல்வி முறையில் பாடப் புத்தகங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் கூட்டியே அரசியல் முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பதற்கு அடிப்படையாக, அரசு முன் எந்த ஆவணமும் இல்லை. சமச்சீர் பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை.ஆட்சியில் இருந்த அரசியல்கட்சித் தலைவரின் (கருணாநிதி) சொந்த கொள்கையை விளம்பரப்படுத்தும் வகையில், தனிப்பட்ட புகழ் பாடும் வகையில் பாடப் புத்தகங்களில் சில பகுதி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.அத்தகைய பகுதிகளை நீக்கியிருக்கலாம். அதற்குப் பதில், காலவரையற்ற முறையில் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். பொருளாதார, சமூக, கலாசார பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வர, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு, 2011-12ம் ஆண்டிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பதால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்தீர்ப்பளித்துள்ளது. சட்டத் திருத்தம் மூலம் இந்த தீர்ப்புகளை ரத்து செய்யும் விதத்தில், சட்டசபையை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வகையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, இந்த வகுப்புகளைப் பொறுத்தவரை, சமச்சீர் கல்வி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் வகை செய்யப்பட்டபடி, அட்டவணையை மாற்றி உத்தரவுகளை பின்பற்றியிருக்கலாம். சட்டத்தில் கூறியுள்ள பிரிவுகளை அமல்படுத்த, நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க, சமச்சீர் கல்வி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருக்கிறது என, பலர் முறையீடுகள் செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மே 16ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பின், சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள், அமைப்புகள் தரப்பில் அளிக்கப்பட்ட முறையீடுகளை, 17, 18ம் தேதிகளில் அரசு பெற்றுள்ளது. இவ்வாறு முறையீடுகள் செய்த பெரும்பாலான அமைப்புகள், சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் தோல்வியடைந்தவர்கள். இந்த முறையீடுகள் எல்லாம் விசாரணைக்கு உகந்ததல்ல. அரசே இந்த முறையீடுகளை அனுமதித்திருக்கக் கூடாது. இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு : ""சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு பேசும்போது நடந்த விவாதம்:
டில்லிபாபு: குன்னூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். 1 கோடியே, 25 லட்சம் பள்ளி மாணவர்கள், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை, 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்.

டில்லிபாபு: சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சமச்சீர் கல்வி இதுவரை...: சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநில அரசு கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி முறைகளை ஒன்றாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
2010: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் அறிக்கை மற்றும் கல்வியாளர்கள் குழுவின் ஆய்வு அறிக்கையை அடுத்து சமச்சீர் கல்வி சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்.
2010 -11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டது. இக்கல்வியை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
2011 மே 11: தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது.
மே 22: சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
ஜூன் 7: சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். இதன்படி இந்தாண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு. பல்வேறு திருத்தங்களுடன் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., தகவல்.
ஜூன் 8: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
ஜூன் 10: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை. மேலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புடன் சேர்த்து ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.
ஜூன் 13: சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.
தங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.
ஜூன் 15: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு இந்தாண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் அதை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
ஜூன் 17: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தலைமை செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
ஜூலை 5: தமிழக அரசின் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
ஜூலை 18: அறிக்கையை விசாரித்த ஐகோர்ட் இந்தாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு.
ஜூலை 19: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
ஆக. 4: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஆக. 8: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஆக. 9: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சமச்சீர் கல்வி இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு.
please comment!!!
உயர் கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன்...



கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கல்வி கடன்களை பெறலாம்.

மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம்.

நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.

உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.
கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும்.

please comment!!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கேற்ற பல்வேறு படிப்புகள் நேரடியாகவும், பகுதி நேரமாகவும், தொலைநெறிக்கல்வி வழியிலும் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பை முடிக்கும் அளவுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் உருவாக்கப்பட்டு  நடத்தப்படுகின்றன. இதில் எம்ஏ ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடனும், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் உள்ளன. 

இதுதவிர இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ், ஹெர்பல் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன. இப்படிப்புகளில் சேர அடிப்படை கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.annamalai university.ac.in என்ற இணையதளத்திலோ, 04144&238248/263/796 ஆகிய தொலைபேசி எண்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

இந்திய பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித் தொகை அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவித் தொகை வழங்குகிறது. பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகே இந்த உதவித் தொகை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கல்விக் கட்டணம், புத்தகம், இதர செலவுகளுக்காக தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை அளிக்கப்படும்.
உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. மேலும், கணினி தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்கம் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான செலவையும் மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளும்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆய்வுப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்திய பல்கலையில் பிஎச்.டி. பயில பதிவு செய்திருப்பவர்கள் முதல் மூன்றாம் ஆண்டில் இருக்கும் மாணவர்கள் வரை இதற்கு தகுதியானவர்கள்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. பயில வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 11.00 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு : http://research.microsoft.com