Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஜாவா நிரலாக்க மொழி

ஜாவா
Java Logo.svg
Paradigm:Object-oriented, structured, imperative
உருவாக்கப்பட்ட வருடம்:1990 களில்
உருவாக்கம்:சண் மைக்ரோசிஸ்டம்ஸ்
Typing discipline:Static, strong, safe, nominative
பிராதன நடைமுறைப்படுத்தல்கள்:{{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
பிறமொழித்தாக்கங்கள்:Objective-C, C++, Smalltalk, Eiffel, C#[1]
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்:C#, D, J#, PHP[verification needed], Ada 2005
இயங்குதளம்:Cross-platform
இணையத்தளம்:http://www.java.com/
ஜாவா சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் (Sun Microsystems) என்ற நிறுவனத்தினால் இணையத்தை மனதில் கொண்டு சி++ கணினி நிரலாக்க மொழியைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட பொருள் நோக்கு நிரலாக்க மொழி. சி, சி++ முதலிய மற்ற கணிமொழிகளின் மூல நிரல் அல்லது மூலங்கள் (Source code) இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஒவ்வொரு முறையும் கம்பைல் (compile) செய்யவேண்டியிருந்தது. இக்குறைபாடுகளைக் களைந்து உருவாக்கப்பட்ட ஜாவா கணினி மொழியில் இயங்குதளத்தில் Compile பண்ணியவுடன் அவை இயங்குதளங்களைச் சாராத பைட் கோட் (byte code) களாக மாற்றப்படும். இந்த பைட்கோட் நிரல்கள் இயங்குதள சார்பின்னைமை ஏற்படுத்துகின்றன. இவை (byte code) இயக்க நேரத்தில், ஜாவா மெய்நிகர் இயந்திரம் (Java Virtual Machine) என்றழைக்கப்படும், மென்பொருளினால் புரிந்துகொள்ளப்பட்டு அந்தந்த இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு இயக்கப்படும்.
ஜாவா மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய மொழிகள் பெயர் மற்றும் நடையளவில் ஒத்திருந்த போதிலும் அவை வெவ்வேறு காரணங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாறுபட்ட மொழிகளாகும்.

வரலாறு

ஆரம்பகால வரலாறு

ஜாவா நிரலாக்க மொழி மற்றும் ஜாவா இயங்குசூழல் ஆகியவை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உட்புற செயற்றிட்டங்களாக மார்கழி 1990ல் ஆரம்பிக்கப்பட்டன. Green Project என்ற பெயரில் கலிஃபோர்னியாவின் மென்லோ பார்க் நகரில் ஆரம்பமான இத்திட்டத்தில் ஜேம்ஸ் காஸ்லிங், பாட்ரிக் நோட்டன், மைக் ஷெரிடன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அடுத்த தலைமுறை (next generation) வீட்டுப் பாவனைக்குரிய இலத்திரனியல் உபகரணங்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைப்பதே இவர்களுடையதும் சன் நிறுவனத்தினதுமான அப்போதைய குறிக்கோளாக இருந்தது.

இப்பணிக்காக இவர்கள் முதலில் சி++ மொழியை பாவிப்பதற்கு எண்ணியிருந்த போதிலும், பின்பு பலவித காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டது. அவர்கள் வளங்கள் வரையறுக்கப்பட்டதொரு உள்ளமைப்பு இயந்திரம் (embedded system) -ஐ உருவாக்க நினைத்திருந்தனர். சி++ மொழியானது ஏற்படுத்தும் நினைவகக் காற்றடங்கள்(memory footprints) இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்களுக்குத் தேவைக்கதிகமாகப் பெரிதானதாக இருப்பதும், சி++ மொழிக்கேயுரியதான கடினத்தன்மை மென்பொருட் பிழைகள் எற்படக் காரணமாக இருக்கும் என்பதும் இம்மொழி நிராகரிக்கப்பட முக்கியக் காரணங்களாக இருந்தது. அத்துடன் சி++ மொழியானது நினைவகச் சுத்திகரிக்கும்(garbage collection அல்லது GC) வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால் மென்பொருளாளர்கள் தாங்களே நினைவகச் சுத்திகரிப்பை ஆற்றவேண்டியிருந்தது. இது மிகக் கடினமானதும் தவறுகள் அதிகமாக எற்பட வாய்ப்புள்ளதுமான ஒரு பணியாகும். மேலும் சி++ மொழியானது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட நிரலாக்கம்(distributed programming), இயக்க இழை(threading) போன்ற வசதிகளை கொண்டிருக்காதது மட்டுமின்றி பல்வேறுபட்ட கருவிகளில் பாவிக்கத்தக்கவாறு இயங்குதள சார்பின்மையையும்(platform independence) கொண்டிருக்கவில்லை.
இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது?
இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1957 களில் சோவியத் அரசு தனது ச்புட்னிக் என்னும் செயற்கைகோளை
விண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான
செயற்கைக்கோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது.
இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது
Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி,
அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தித்
தருமாறு கேட்டுக்கொண்டது.

கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில்
அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய
ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை
ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதூரக்
கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும்
ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது
ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின்
பார்வைக்குக் கொண்டுவந்தது.

இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில்
உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு
பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில்
ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி
தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதேனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது
இல்லை.

(நம்முடைய இணையமும் அவ்வாறே! உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும்
மற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்-
கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற
கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை
அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே
அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று
காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)

அடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில்
உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள்
APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள்
(SUPER COMPUTER) மற்றும் MINIக் கணினிகள் போன்ற கணினிகளையும்
ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச்
செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine
Independant என்று கூறுவது உண்டு.

அதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள் (Operating System) பயன்படுத்தப்படும்
கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உறுவாக்கப்பட்டது. இதனை
ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.

இத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு
ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்-
கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக
இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவனங்களை
தம்மோடு இணைத்துப் பின்.......உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில்
வழங்கப்படலாயிற்று.

இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம்?

குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தந்த நாடுகளின் இணையத் தொடர்பை
அந்தந்த நாடுகளே கவணித்துக்கொள்கின்றன, மற்ற நாடுகளுடனான அந்நாட்டின்
தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்-
தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை
தனிச்சீர்மை (unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன
அதற்காக The Internet Corporation for Assigned Names and Numbers மற்றும்
Internet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும்
அமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
 பென் ட்ரைவை ராம் ஆக மாற்றலாம்:
       
       நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும்.

இதனுடைய சிறப்பம்சங்கள் :

1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.

2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.

3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்.


 அந்த மென்பொருளுக்கான  டவுன்லோட் 
 
 
 வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்

நமது நண்பர்களிடம் உள்ள கோப்புகளை சோத்தித்து பார்ப்பதற்காக வாங்கி வருவோம். அப்போது கூடவே வைரசும் வருகிறதா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும். அதனை நம்முடைய கணினியில் உள்ளிட்டு நம்முடைய கணிப்பொறியில் உள்ள ஆண்டிவைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பார்ப்போம் ஆனால் முடிவு வேறு விதமாக இருக்கும். வைரஸ் இருப்பதாக நம்முடைய ஆண்டிவைரஸ் கூறும். ஆனால் நம்முடைய நண்பருடைய கணினியில் ஸ்கேன் செய்த போது எந்த விதமான வைரசும் இல்லை என அந்த கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் கூறும். இதில் எது உண்மை என ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் கூறியதே உண்மையாக இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் தவிர்க்க ஒரு ஆண்டிவைரஸ் ஸ்கேனர் உள்ளது.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒப்பன் ஆகும் விண்டோவில் எந்த கோப்பினை சோதிக்க வேண்டுமோ ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பானது சோதிக்கப்பட்டு முடிவு கூறப்படும்.
உங்களுடைய விருப்பபடி இந்த மென்பொருளின் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும்.இந்த மென்பொருளில் 20எம்.பி அளவுடைய கோப்புகளை மட்டுமே சோதிக்க முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் ஏழு (32,64)பிட் களில் இந்த மென்பொருளானது இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் பல ஆண்டிவைரஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடியது ஆகும். இதன் மூலம் எந்த ஆண்டிவைரஸ் சிறப்பானதாய் உள்ளது எனவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.


எக்ஸெல் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த….
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொருமுறையும் இவற்றை மனதில் கொண்டு அமைக்கும்போது சில தவறுகள் ஏற்படலாம். ஒருமுறைதான் நன்றாக அமைத்துவிட்டோமே, அவற்றை சேவ் செய்து எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் வழியில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, எக்ஸெல் தொகுப்பில் அந்த வசதி இல்லை. ஆனால் வேறு சில வழிகளில் இதனை நாம் மேற்கொள்ளலாம். நோட்பேடில் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதில் இவ்வாறு அமைக்கப்படும் முக்கிய பார்முலாக்களை சேவ் செய்து வைத்துப் பின்னர் தேவைப்படுகையில், டாகுமெண்ட் டைத் திறந்து காப்பி செய்து பயன்படுத்தலாம். இந்த வகையில் ஓரளவிற்கு ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட பார்முலாக்களைக் கையாள்கையில் அவற்றைத் தவறுதலாகக் காப்பி செய்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். இன்னொரு வழியும் உள்ளது. இந்த பார்முலாக்களுக்கு, அவற்றை அடையாளம் காணும் வகையிலான பெயர்களைச் சூட்டலாம். அதற்கான வழிகளைக் காணலாம்.
1.வழக்கம்போல உங்கள் பார்முலாவினை அமைக்கவும்.
2. பார்முலா உள்ள செல்லை செலக்ட் செய்திடவும். எப்2 அழுத்தவும். இப்போது எக்ஸெல் எடிட் முறைக்கு வரும்.
3. ஷிப்ட் கீயை அழுத்தி, கர்சரை நகர்த்தி முழு பார்முலாவினைத் தேர்ந்தெடுக்கவும். பார்முலாவின் முதலில் உள்ள = அடையாளம் முதற் கொண்டு தேர்ந்தெடுக்கவும்.
4. முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு பார்முலா சென்றுவிடும்.
5. அடுத்து எஸ்கேப் கீயினை அழுத்தவும். இப்போது எடிட் முறையிலிருந்து வெளியேறி இருப்பீர்கள். செல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
6. அடுத்து Insert மெனு செல்லவும். அங்கே Name என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Define என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Define Name என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. ஒர்க்புக் பாக்ஸில் Names என்பதில், இந்த குறிப்பிட்ட பார்முலாவிற்கான பெயரை டைப் செய்திடவும்.
8. அடுத்து இந்த டயலாக் பாக்ஸில் கீழாக உள்ள,  Refers To பாக்ஸில் என்ன உள்ளதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கண்ட்ரோல்+வி கீகளை அழுத்தவும். இப்போது செல்லுக்கான ரெபரன்ஸில், கிளிப்போர்டில் உள்ள பார்முலா அமைக்கப்படும்.
9. இந்த பார்முலாவில் டாலர் அடையாளம் எதுவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அப்படி எதுவும் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். (அவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற வகையில் உள்ள பார்முலாக்களுக்கு இந்த வழி சரியாக இருக்காது.)
10. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி எப்போதெல்லாம் இந்த பார்முலாவினைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ, = அடையாளம் ஏற்படுத்தி, இந்த பெயரினை மேலே 7ல் கொடுத்த பெயரினை டைப் செய்திடவும். செல்லில் பெயர் காட்டப்பட்டாலும், இந்த பெயருக்கு எந்த பார்முலா அமைக்கப்பட்டுள்ளதோ, அது ஒர்க்ஷீட் கணக்கிடுகையில் பயன்படுத்தப்படும். இந்த பார்முலாவினை ஒர்க்ஷீட்டின் எந்த செல்லிலும், அதற்கான பெயரைக் கொண்டு பயன்படுத்தலாம்.
அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver
நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயன்கள் :
இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
நாம் எந்த ப்ரோக்ராமில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்க படும்.
இந்த மென்பொருளை Install செய்ய தேவையில்லை, நேரடியாக இயக்கி கொள்ளலாம்.
சிறிய அளவே உடையது(768 kb) .தரவிறக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற பைலை நேரடியாக உபயோகிக்கலாம்(Install செய்ய வேண்டியதில்லை). அந்த பைலை இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


Save Interval:  இந்த விண்டோவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம். 
Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
முடிவில் Hide என்பதை கிளிக் செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த ப்ரோக்ராமில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும் இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
Important Note : நீங்கள் Browsing ஆரம்பிப்பதற்கு முன்னாள் இந்த மென்பொருளை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வலை பக்கங்களையும் சேமிக்க ஆரம்பிக்கும். அப்புறம் தேவை படும் போது இயக்கி கொள்ளுங்கள்.