Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு
நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

கதையின் வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து
எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.
விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார்.
அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக
கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது.
இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
இந்தக் காலக்கட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.

வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்

  • வந்தியத் தேவன்
  • குந்தவை
  • அருள்மொழிவர்மன்
  • சுந்தர சோழர்

ஏனைய சில பாத்திரங்கள்

  • நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியனை காதலிக்கிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றபின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளவரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள். இறுதியில் சுந்தர சோழருக்கும் மந்தாகினிக்கும் பிறந்தவள் என்றும், ஆதித்த கரிகாலனின் தங்கை என்றும் உண்மை அறிந்து மறைகிறாள்.
  • ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.
  • அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.
  • வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார்.
  • பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது.
  • சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார்.
  • செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு

இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.

இந்த பொன்னியின் செல்வன் கதையை மின்னூலாக (PDF) பதிவிறக்கம் செய்து படித்து மகிழ கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

 

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.

கதைச் சுருக்கம்

ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.

உண்மைச் சரித்திரப் பாத்திரங்கள்


இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பின்வரும் பாத்திரங்கள் உண்மையாகவே வரலாற்றில் வாழ்ந்தோராகும்.
  • முதலாம் நரசிம்ம பல்லவன்
  • சிறுத்தொண்டர் - நரசிம்மரின் சேனாதிபதி
  • இரண்டாம் புலிகேசி - சாளுக்கிய மன்னன்
  • சுவான்சாங் - சீன பயணி
  • நரசிம்மரின் நரபலியைத் தடுக்கும் முன்னெடுப்புகள்
இந்த பார்த்திபன் கனவு கதையை மின்னூலாக (PDF) பதிவிறக்கம் செய்து படித்து மகிழ கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

 
தொகுப்பு : 
http://ta.wikipedia.org/wiki/
பின் குறிப்பு : கருத்துக்களை விட்டு செல்லவும்.
கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம்  கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

சளி  கரிசலைச் சாறு, எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.
தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.
please comment!!!
இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.

மஞ்சள் மருத்துவக் குணங்கள்

மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.

மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.

மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.

மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.

மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.

மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.

மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.
please comment!!!
எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல்,  வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி  மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு  தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை  தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம்  துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்  குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள  குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
please comment!!!
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.. 
please comment!!!
கண்ணில் அரிப்பு, நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் எனச் சிலருக்கு கண்களே தொல்லையாகி விடுவதுண்டு. இவை எல்லாம் கண்ணில் ஒவ்வாமையின் Eye Allergy அறிகுறிகளாகும். இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை.

தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமைகளுடன் கைகோர்த்து வருவதுண்டு. பொதுவாக ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம்.

வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம். சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். ஒட்டடை, பூனை, நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர வழிகள்.........    

• வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது.    

• அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.    

• வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.    

• கொன்டக்ட் லென்ஸ் contact lenses.போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.    

• எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள்.அரிப்புடன் கிருமித் தொற்றும் கண்ணில் நுண்ணிய உரசல்களும் பிரச்சனையை மோசமாக்கும். அவ்வாறு அரிப்பு இருந்தால் உடனே உங்கள் மருத்துவரைக் காணுங்கள். 
please comment!!!
ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?  பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர்  குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து  பயன்படுத்துவது நல்லதல்ல.

அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.
இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை  வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.

தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள்.  அதனால்  கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப்  போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.

பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை  தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.
please comment!!!
உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.

* பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.

* முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.

* அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.

* வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.

* வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும் சரியாகிவிடும்.

* அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும். கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.

* நீண்ட நாள் வியாதியில் வாடுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும், ஆரஞ்சு தோல் சேர்த்து நீரும், தக்காளிபழ ரசமும் மூன்றும் சமமாக கலந்து குடித்தால் சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம். 
please comment!!!
 ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கை கோள்களில் இரண்டு செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும் இரண்டு ஆஸ்திரியா நாட்டிற்கும் சொந்தமானவை. ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும் ஒன்று டென்மார்க் நாட்டிற்கும் சொந்தமானவை. இவற்றோடு இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 'சரள்' செயற்கை கோளும் விண்ணில் பாய்கிறது. 7 செயற்கை கோள்கைகளும் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இவற்றை சுமந்து கொண்டு வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. 59 மணிநேர கவுண்டன் சூரிய வட்டப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 785 கி.மீட்டர் உயரத்தில் இந்த 7 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இதற்காக வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை 59 மணிநேர 'கவுண்ட் டவுன்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது

please comment!!!
சிங்கப்பூர்: இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நாயாங் தொழில்நுட்ப பல்கலையை சேர்ந்த குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

please comment!!!
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
please comment!!!
 சென்னை: சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்., 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவ., 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜன., 3, 4ம் தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை - 115, வேலூர்-112, விழுப்புரம் - 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
please comment!!!
இந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிமிடெட் நிறுவனம், ஏரோனாடிக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், ஏர்கிராப்ட் மனுபாக்சரிங் டிப்போ ஆகியவற்றை இணைத்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் 1964ல் நிறுவப்பட்டது. விமானம் மற்றும் இதர பாகங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் சர்வ தேசப் புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் 48 பிட்டர் பணி இடங்களும், 31 மெக்கானிகல் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: எச்.ஏ.எல்., நிறுவனத்தின் பிட்டர் மற்றும் மெக்கானிகல் பிரிவு டிப்ளமோ டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.ஏ.சி., அல்லது என்.சி.டி.வி.டி., சான்றிதழை இத்துறையில் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்வி அமைப்பின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்: எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து Hindustan Aeronautics Limited என்ற பெயரில் கான்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது.
இதன் பின்னர் ஆன்-லைனில் இந்தப் பதவிகளுக்கு 18.12.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து உரிய இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 28.12.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி :
Deputy General Manager (HR),
Hindustan Aeronautics Limited,
Transport Aircraft Division,
PB No225,
Chakeri, Kanpur - 208008 (UP).
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.12.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 28.12.2011
இணையதள முகவரி : www.hal&india.com/careers/knp/DT&TT&Knp_09&12&11.pdf
please comment!!!
பத்து ஆண்டுகளுக்குப்பின் பஸ் கட்டண உயர்வு :54 சதவீதம் வரை உயர்கிறது

தமிழக அரசு, பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணம், சராசரியாக 54 சதவீதம் வரை உயர்கிறது. கடந்த 2001ம் ஆண்டின் இறுதியில்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப்பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நகரம் கி.மீ., டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்

திருச்சி 322 180 (105) 200 (130) 245 (180)
மதுரை 450 255 (145) 275 (180) 320 (240)
தஞ்சை 365 210 (118) 225 (140) 270 (190)
நெல்லை 613 350 (200) 375 (240) 435 (320)
கோவை 510 290 (165) 310 (200) 360 (270)
சேலம் 341 195 (115) 210 (135) 245 (180)
புதுச்சேரி 136 195 (115) 210 (135) 240 (180)

எப்போது அமலுக்கு வரும்?

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆணை இன்னும் வரவில்லை என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி பட்டியல் தயாரித்து வருகிறோம். அரசு உத்தரவு கிடைத்ததும், கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம்' என்றார்.

மற்ற தென் மாநிலங்களுக்கு இணையாக, தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு தொடர்பான விவாதங்கள் அரசியல் ரீதியாக ஏற்படும் போதெல்லாம், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்து, ஆளுங்கட்சி பதிலடி தருவது வழக்கம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு, தென் மாநிலங்களுக்கு இணையாக உள்ளது.

எவ்வளவு?
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை, 28 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது; இது, 42 பைசாவாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு (டீலக்ஸ்), அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்), அதிநவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களுக்கான கட்டண உயர்வும், பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் குளிர்சாதன பஸ்களுக்கு தற்போது, கி.மீட்டருக்கு, 85 பைசா வசூலிக்கப்படுகிறது. "ஏசி' பஸ்களுக்கு கேரளாவில், கி.மீட்டருக்கு, 90 பைசாவும், கர்நாடகாவில், 1.34 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த நேற்றைய அறிவிப்பில், "ஏசி' பஸ்களின் கட்டண உயர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தென் மாநிலங்களில் வசூலிக்கப்படும் பஸ் கட்டண விவரம் (கி.மீ.,):

*தமிழகத்தில் பழைய கட்டணம், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் புறநகர் (சாதாரண பஸ்கள்) டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)

* தமிழகத்தில், கடந்த 2001, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (17ம் தேதி) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ஷெட்யூல்டு வங்கிகளில் கேரளாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி தமிழ்நாட்டிலும் மிகவும் அறியப்பட்டுள்ள முன்னணி தனியார் வங்கியாகும். திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கியின் கோல்கட்டா கிளைகளில் 14 புரொபேஷனரி கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கலை போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரை இயக்குவதில் நல்ல திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
இதர விபரங்கள்: சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை South Indian Bank என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன், வயது, கல்வி ஆகியவற்றுக்கான சான்றுகளின் சுய உறுதியளிக்கப்பட்ட கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு 10.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the post of PRO.Clerks என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The South Indian Bank Ltd.,
Regional Office,
Jayasree Inn, 1st Floor,
38 G.G., Avenue, KOLKATTA - 700013.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதி நாள் : 10.11.2011
இணையதள முகவரி: www.southindianbank.com/UserFiles/KOLKATA_ANNEXURES.pdf
please comment!!!
உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, "பினைன் கட்டி' என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். "மெலிக்னன்ட் கட்டி' தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.

கேன்சர் வர காரணங்கள்

* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், "பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா' என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

இதய கட்டிகளில், "மிக்சோமா' என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.

மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, "மைட்டிரல் ஸ்டெனோசிஸ்' என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், "எண்டோ கார்டைட்டிஸ்' என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.

முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.

மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
please comment!!!
நியூயார்க்: உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டுகிறது. ஐ.நா., மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும்.

எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை. இவ்வாறு பபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியுள்ளார்.

உ.பி.,யில் விழா: வரும் 31ம்தேதி, மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதால் இதற்கான விழாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. "பிளான்' என்ற சர்வதேச அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் குறிப்பிடுகையில், " உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது. பஞ்சாபில் இந்த நிலை இன்னும் மோசம். அங்கு ஆயிரம் பையன்களுக்கு 846 சிறுமிகள் என்ற விகிதாசாரம் காணப்படுகிறது. உ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளோம். 700வதுகோடி குழந்தைக்கு சான்றிதழும் அளிக்க உள்ளோம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமைய உள்ளது' என்றார்.

please comment!!!
காற்றைப்போல ஊழலும், லஞ்சமும் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. என்றாலும், நமது நாட்டில் லஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் "ஒருவிதத் திறமை'யாகவே பார்க்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக, இத்தகைய சேட்டைகளைச் செய்துவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்வது சாகசக் கலையாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஈடுபடுவோர் சாதிக்கத் தெரிந்தோராகப் பார்க்கப்படுகின்றனர்.  சான்றிதழ் வாங்குவதிலிருந்து சகலத்திலும் தொடரும் லஞ்சம், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என்பதில் தன் உச்சக்கட்ட கைவரிசையைக் காட்டியது.  அதேபோலத்தான் ஊழலும். எந்தத் துறை, எந்தப் பதவி என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும், பதவிகளிலும் அது தன் கைங்கர்யத்தைக் காட்டி தனியாட்சி நடத்துகிறது.  ஒழுக்கமும் மனித நேயமும் பின்தங்கினாலும் பரவாயில்லை. வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்போதும் என்றே மேல்நிலைப் பதவிகளில் உள்ளோர்கூட கீழான செயல்களைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதன் விளைவுதான் லஞ்சமும், ஊழலும்.  பணம், பதவி, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் அடிமைப்படுகிறார்கள். நாளடைவில் எந்தக் காரியம் என்றாலும் அதில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே அவர்களின் முழுக் கவனமும் பதியத் தொடங்கிவிடுகிறது.  இத்தகைய தவறான செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுவோர் சிறிதும் வெட்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி புன்னகையுடன் நடப்பதைப் பார்க்க முடிகிறது.  தங்கள் தவறுகள் அனைவருக்கும் தெரிந்தாலும்கூட தங்களை நேர்மையாளர்கள், பரிசுத்தவான்கள்போல வேதம் ஓதி தங்கள் சாத்தான் முகங்களை அவர்கள் எளிதாக மறைத்துக் கொள்கின்றனர்.  "உழைக்காமல் உண்பவன் திருடன்' என்றார் நம் தேசப்பிதா. அதனால்தானோ என்னவோ ஊழல்வாதிகளும், லஞ்சப் பேர்வழிகளும் நேர்மையாளர்களைவிட அதிகமாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களின் கடின உழைப்பும், கவனமும் இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கும், பிறகு கைது, தண்டனை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்குமே உதவுகின்றன.  லஞ்சம், ஊழலைக் கண்டிப்பாக ஒழித்தே தீர வேண்டும் என நமது அரசியல்வாதிகள் ஆவேசமாக முழங்குகிறார்கள் என்றால் ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்படும் ஊழல் குழிதோண்டிப் புதைக்கப்படப்போகிறது என்றோ, விரைவில் இன்னொரு மெகா ஊழல் வெளிவரப்போகிறது என்றோதான் அர்த்தமாகிறது. இதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  நமது நாட்டில் நடந்த பெரிய ஊழல்கள் என எடுத்துக்கொண்டால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலவற்றை மட்டுமே நினைவுகூரலாம். ஆனால், அண்மைக்காலத்தில் பெரிய ஊழல்கள் ஆண்டுதோறும் என்பதிலிருந்து மாறி மாதந்தோறும் என வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஒன்றையொன்று மிஞ்சும்விதமாக வெளிவரும் ஊழல்கள் தேச நலனில் அக்கறை கொண்டிருப்போரை மிகுந்த கவலைக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்குகின்றன.  வெறும் சட்டம் இயற்றி ஊழலை ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், லஞ்சம், ஊழல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து அதிகபட்ச தண்டனை தருவதன் மூலம் இக் குற்றங்களைப் பெருமளவு குறைக்க முடியும்.  தனக்கு நன்மை செய்யும் ஊழல் பல கோடி மக்களைப் பாதிக்கிறது என்பதை அதில் ஈடுபடுவோரும் மனசாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.  எண்ணெய் ஊழல், பீரங்கி ஊழல், சுரங்க ஊழல், அலைக்கற்றை ஊழல் எனத் தொடரும் மெகா ஊழல்களின் பட்டியல் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன.  "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என நமது தாய்த்திருநாட்டின் இயற்கை வளங்களின் பெருமைகள் குறித்து எளிய வரிகளில் எடுத்துரைத்தார் கவிஞர் ஒருவர்.  இன்றோ இயற்கை வளங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நாட்டின் வளத்தை தங்களால் முடிந்த அளவுக்கு ஊழலின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.  யுகம்தோறும் அரக்கர்கள் பலரை அழிக்க கடவுள் பத்து அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஊழல் என்ற ஒரேயொரு அரக்கனை அழித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே கடவுள் பத்து அவதாரம் எடுக்க வேண்டுமோ என்றே தோன்றுகிறது. 
please comment!!!
பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா?
பிரபஞ்ச வெளியில், நமது சூரியனைப் போல சிறியதும் பெரியதுமான ஏராளமான சூரியன்கள் இருப்பது தெரிந்த ஒன்றுதானே! இவற்றில், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள "கிளைஸ் 581' என்ற சிவப்புக் குள்ள நட்சத்திரமும் ஒன்று. துலா விண்மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஆறு கிரகங்கள் வலம் வருகின்றன. இவற்றுக்கு கிளைஸ் 581 பி, சி, டி, இ, எஃப், ஜி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இவற்றில் கிளைஸ் 581 ஜி என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அண்மையில் கலிஃபோர்னியா சாண்டாகுரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
ஓலைக்கூரைகளின் ஊடாக ஊடுருவும் சூரிய ஒளி கீழே தரையில் வட்டங்கள் வட்டங்களாக மட்டுமே விழுவது ஏன்? 
ஓலைக்கூரைகளில் உள்ள துவாரங்கள், துளைகளின் வடிவங்கள் எப்படி இருந்தாலும் ஒளி கீழே தரையில் வட்டப் பொட்டுகளாக மட்டுமே விழும். வட்ட வடிவமாக சூரியன் இருப்பதால்தான் இப்படித் துளைகளின் ஊடாக வருகின்ற சூரிய ஒளிக்கதிர்கள் வட்ட வடிவமாக, சூரியனின் ஏராளமான பிம்பங்களைக் கீழே வீழ்த்துகின்றன. 
காஸ்மிக் கதிர்களைப் பற்றித் தெரியும்? அதென்ன காஸ்மிக் ஆண்டு?
பால் வீதியில் பல நூறு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. சூரியனைச் சுற்றி நமது பூமி உட்பட எட்டு கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு வலம் வருகின்றன. அதுபோலவே பால்வீதியின் மையத்தை அச்சாக வைத்து எல்லா நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன.இவற்றில் சூரியன் தன் எட்டு கோள்களோடும் சேர்ந்த பால் வீதியில் சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவே காஸ்மிக் ஆண்டு ஆகும்.பால்வீதியின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வினாடிக்கு 220 கீலோ மீட்டர் வேகத்தில் சூரியன் அசைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சூரியன் ஒரு தடவை சுற்றிவர சுமாராக 250 மில்லியன் ஆண்டுகல் ஆகின்றன. எனவே ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.விஞ்ஞானிகள் வாஸ்ப் 12-பி என்ற கோளை 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்தக் கோளில் கார்பன் மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு நிறைய வைரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அங்கே ஒரு முறை போய் திரும்பி வந்தால் பெரும் பணக்காரராக ஆகி விடலாம்! ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது...இந்தக் கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டர் தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு) அப்படியானால் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை...
please comment!!!